My page - topic 1, topic 2, topic 3

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 10!

நீங்கள் கேட்டவை

கேள்வி:

ஐந்து முறை சினை ஊசி போட்டும் மாடு சினையாகவில்லை. சினையாக என்ன செய்யலாம்? கோமாரி வந்தால் சினைப் பிடிக்காதா?

– தலைவன், திருவண்ணாமலை.

பதில்:

அய்யா, கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று கால்நடை வல்லுநர்கள் கூறுகிறார்கள். உங்கள் கால்நடை மருத்துவரிடமே இதற்குத் தீர்வு கேளுங்கள். அடுத்து, மாட்டின் கருப்பையைச் சுத்தம் செய்யும் மூலிகை மருத்துவத்தைச் செய்து பாருங்கள். அதற்கு இங்கேயுள்ள கட்டுரையைப் படியுங்கள். நன்றி!

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!


கேள்வி:

ஆட்டுப் பண்ணை அமைக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?

– கிருஷ்ணமூர்த்தி, சிவகங்கை.

பதில்:

அய்யா, முதலில் ஆடு வளர்ப்பைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள, ஆடு வளர்ப்பில் பயிற்சி பெறுங்கள். அதற்கு, குன்றக்குடியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகினால், ஆடு வளர்ப்புப் பயிற்சிக் கிடைக்கும். நன்றி!

முகவரி:

Krishi vigyan Kendra,

Kundrakudi, Sivagangai – 630206.

04577-264288


கேள்வி:

கால்நடை வளர்ப்பில் சிறந்தது எது? வெள்ளாடு? அல்லது செம்மறி ஆடு?

– சக்திவேல், சங்ககிரி.

பதில்:

அய்யா, புல் நிறைந்த மேய்ச்சல் நிலம் இருந்தால் செம்மறி ஆடுகளை வளர்க்கலாம். ஏனெனில், செம்மறி ஆடுகள் புல்லைத் தான் விரும்பி உண்ணும்.

சூபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, வேலிமசால், குதிரை மசால் போன்றவற்றைச் சாகுபடி செய்யும் வசதி இருந்தால், வெள்ளாடுகளை வளர்க்கலாம். ஏனெனில், வெள்ளாடுகள் இலை தழைகளைத் தான் விரும்பி உண்ணும்.

செம்மறி ஆடு பெரும்பாலும் ஒரு குட்டி தான் போடும். வெள்ளாடு குறைந்தது இரண்டு குட்டிகளை ஈனும். மூன்று நான்கு குட்டிகளைப் போடும் ஆடுகளும் கூட உண்டு.

செம்மறி இறைச்சியை விட, வெள்ளாட்டு இறைச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனையும் எளிதாக இருக்கும். நன்றி!


கேள்வி:

தென்னை மரம் அதிகமாகக் காய்க்க என்ன உரம் வைக்க வேண்டும்?

– செந்தில் குமார், முகவூர்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!


கேள்வி:

காளான் வளர்ப்புப் பயிற்சி எங்கே நடத்தப்படுகிறது?

– தியாகராஜா, திருவைகுண்டம்.

பதில்:

அய்யா, உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகுங்கள். பயிற்சி கிடைக்கும். நன்றி!


கேள்வி:

மாப்பிள்ளைச் சம்பா நெல் விதை வேண்டும்.

– நந்தகுமார், ஆலங்குடி குருஸ்தலம்.

பதில்:

அய்யா, மாப்பிள்ளைச் சம்பா நெல் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. உங்கள் பகுதி விவசாய அதிகாரியிடம் கேட்டால், கிடைக்கும் இடத்தைச் சொல்லி விடுவார். இல்லையேல், நவகங்கா விதைப் பண்ணையை 90807 94783 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி!


கேள்வி:

கால்நடைப் பயிற்சி எப்போது நடக்கும்? தகவல் தெரிவிக்கவும்.

– மு.சிவக்குமார், விழுப்புரம்.

பதில்:

அய்யா, திண்டிவனத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்புப் போன்ற பயிற்சிகள் கிடைக்கும். எனவே, அந்த நிலையத்தை அணுகுங்கள்.

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி: 04147 – 250001, 250002. நன்றி!


கேள்வி:

சிறிய டிராக்டர் தேவை. அதற்கான கடன் வசதியைப் பற்றிக் கூறவும்.

– துரை.சோமசுந்தரம், திருச்சிராப்பள்ளி.

பதில்:

அய்யா, திருச்சியில் உள்ள ஏதாவது ஒரு டிராக்டர் ஏஜென்சியை அணுகினால், நீங்கள் கேட்கும் விவரங்கள் அனைத்துக் கிடைக்கும். நன்றி!


கேள்வி:

எங்களுக்கு நாட்டுச் சக்கரை மொத்தமாக வேண்டும்.

– க.சிவக்குமார், ஆத்துவாம்பாடி

பதில்:

அய்யா, இந்த முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். ரெ.சிவக்குமார், நற்சுவை நாட்டுச் சர்க்கரை, தருமபுரி, தொலைபேசி: 75503 37337. நன்றி!


கேள்வி:

வாத்து வளர்ப்பு இலாபம் தருமா? தேனீ வளர்க்கலாமா?

– சதீஸ்குமார், வீரக்குட்டை, நாமக்கல்.

பதில்:

அய்யா, இந்த இரண்டையுமே உங்கள் தென்னந் தோப்பில் நன்றாகச் செய்யலாம். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகினால், பயிற்சி கிடைக்கும்.

முகவரி:

Veterinary College and Research Institute Campus,

Mohanur Road,

Namakkal.

போன்: 04286 – 266345 / 226650. நன்றி!


கேள்வி:

கோழி வளர்ப்பு பற்றிக் கூறுங்கள்?

– சௌகத் அலிக்கான், நெல்லை.

பதில்:

அய்யா, இங்கே கூறியுள்ள முகவரியை அணுகினால், உங்களுக்குத் தேவையான கோழி வளர்ப்புப் பயிற்சி கிடைக்கும்.

Krishi Vigyan Kendra,

Urmelalagian, Ayikudi,

Tenkasi (TK)

Tirunelveli-627 852

Phone: 04633 292 500, 94439 62433. நன்றி!


கேள்வி:

நான் ஒரு தென்னை விவாசாயி. எனது தோட்டத்தில் சிவப்புக் கூன்வண்டு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்குத் தீர்வு என்ன?

– எதுக்கோட்டை ராஜ், தேனி.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது நன்றி!

தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!


 

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks