எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் Sesame Cultivation

ள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம்.

நோய் அறிகுறிகள்

இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும். பிறகு, அச்செடிகள் இறந்து விடும்.

முதிர்ந்த நாற்றுகளில், பழுப்பு மற்றும் கருநிறக் கருகல் தோன்றிப் பெரிதாகி, தண்டைப் பாதிக்க வைப்பதால், அச்செடிகள் இறந்து போகும்.

ஏற்ற சூழ்நிலை

பகல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசு மற்றும் அதற்கு மேல் இருப்பதும், நீண்ட வறட்சியைத் தொடர்ந்து பாசனம் செய்வதும், இந்நோய் பரவ ஏற்ற சூழல்களாகும்.

கட்டுப்படுத்துதல்

நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நோய் வெளியே தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் 50 WP வீதம் கலந்த கலவையை, நோயுற்ற செடிகளின் அருகில் ஊற்ற வேண்டும்.

எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, விதைகளை விதைத்து முப்பது நாட்கள் கழித்து, நிலத்தில் இட வேண்டும்.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!