சிக்கனப் பாசனமே சிறந்தது!

கோடைக்காலம் தொடங்கி விட்டது. போதுமான அளவு பெய்யாமல் பருவ மழை பொய்த்துப் போனதால் இந்தாண்டு வெய்யிலின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும்.

கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டும். குடிநீர்ப் பஞ்சம் தலை தூக்கும். வேளாண்மைக்குத் தேவையான நீர் கிடைக்காது. கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.

தமிழக மக்கள், தாங்கள் சார்ந்துள்ள மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று இப்போதே அரசிடம் கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்தக் கோடைக் காலத்தைச் சமாளிப்பது என்பது அனைவருக்கும் ஒரு சவாலாகவே இருக்கும்.

எனவே, இருக்கும் நீரைக் குடிப்பதற்கும் சரி, பாசனத்துக்கும் சரி, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தெருக் குழாய்களில் சரியான மூடிகளின்றிக் குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

விளைச்சலுக்கு அதிகளவு நீரை எடுத்துக் கொள்ளாத பயிர்களைப் பயிரிட வேண்டும்.

வாய்க்கால் வழிப் பாசன முறையைக் கைவிட்டு விட்டுக் குழாய் வழிப் பாசன முறைகளைக் கையாள வேண்டும்.

இப்போது மட்டுமல்ல, எப்போதும் சொட்டுநீர்ப் பாசனம் போன்ற சிக்கனப் பாசன முறைகளைக் கடைப்பிடித்தல், நீரை மிச்சப்படுத்தி விளைச்சலைப் பெருக்கலாம்.


2011 மே இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!