இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

சந்தை விற்பனை

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன.

விற்பனை செய்யப்பட்ட விளை பொருள்கள்

அகத்தி விதை, ஆவாரம்பூ,

அவுரிக்காய், அவுரி இலை,

உளுந்து, கம்பு, முந்திரிக் கொட்டை,

ஆமணக்கு, மிளகாய் வற்றல்,

இரும்புச் சோளம், வெள்ளைச் சோளம்,

செங்கட்டான் சோளம், மக்காச்சோளம்,

தேங்காய், கொப்பரை, மல்லி,

பருத்தி, காராமணி, பாசிப்பயறு,

நிலக்கடலை, எள், குதிரைவாலி,

முருங்கை விதை, வேப்ப முத்து,

வெங்காயம், நெல்,

மாப்பிள்ளைச் சம்பா நெல், கருப்புக்கவுனி நெல்,

சிவன் சம்பா நெல், சித்ரகார் நெல்,

குழிவெறிச்சான் நெல், கருங்குறுவை நெல்,

காட்டுயானம் நெல், இரத்தசாலி நெல்,

பூங்கார் நெல், குள்ளக்கார் நெல்,

நவரா நெல், அரிசி, சூரியகாந்தி விதை,

சணப்பை விதை, தினை, வரகு,

வெள்ளைத் துவரை, இரத்தசாலி அரிசி,

மொச்சை, சவுண்டல் விதை,

கருமஞ்சள், கஸ்தூரி மஞ்சள்,

வரகரிசி, குதிரைவாலி அரிசி, தினை அரிசி,

துவரம் பருப்பு, சாமை, புளி, துவரை, கேப்பை.

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், கீழ்க்கண்ட வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள் பயனடைந்து உள்ளனர்.

கர்நாடகம், காரைக்கால் (புதுச்சேரி)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,

விருதுநகர், திண்டுக்கல், கோவை,

தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர்,

கடலூர், திருவண்ணாமலை, திருச்சி,

தேனி, மயிலாடுதுறை, திருநெல்வேலி,

சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர்,

கன்னியாகுமரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி,

இராணிப்பேட்டை, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர்,

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், கீழ்க்கண்ட வெளி மாநில மற்றும் தமிழக விவசாயிகள் 1,526 பேர் பயனடைந்து உள்ளனர்.

புதுச்சேரி, காஞ்சிபுரம், விருதுநகர்,

திண்டுக்கல், திருவள்ளூர், தூத்துக்குடி,

வேலூர், தஞ்சாவூர், கடலூர்,

திருவண்ணாமலை, திருச்சி,

திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம்,

நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர்.

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (01.04.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன.

காளப்பன்பட்டி விவசாயியின் 26,420 கிலோ குதிரைவாலி, கிலோ ரூ.41-க்கு விலை போனது. இதன் மூலம், ரூ 10,94,053-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயி மற்றும் விளாச்சேரி விவசாயியின் 8,669 கிலோ கருப்புக்கவுனி நெல், கிலோ ரூ.82.50 வீதம் சென்னைக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.7,15,193-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

சிவகங்கை விவசாயியின் 8,49 கிலோ மாப்பிள்ளைச் சம்பா நெல், கிலோ ரூ.40 வீதம் பாண்டிச்சேரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.33,960-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயியின் 1,875 கிலோ கருங்குறுவை நெல், கிலோ ரூ.40 வீதம் சென்னைக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.75,000-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

காரியாபட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் சக்குடி உழவரின் 4,746 கிலோ குதிரைவாலி, கிலோ ரூ.40 வீதம் சென்னை வியாபாரி மற்றும் சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.1,74,350-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

செங்கப்படை மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 3,350 கிலோ துவரை, அதிகளவு விலையாக, கிலோ ரூ.82, குறைந்தளவு விலையாக, கிலோ ரூ.80 வீதம், கோவைக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.2,73,760-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

உசிலம்பட்டி விவசாயியின் 4,75 கிலோ கம்பு, கிலோ ரூ.26.50-க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.20,800-க்கு வர்த்தகம் நடைபெற்றது. உசிலம்பட்டி விவசாயியின் 1,500 கிலோ வரகு, கிலோ ரூ.26.50-க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.52,500-க்கு வர்த்தகம் நடைபெற்றது

சக்குடி விவசாயியின் 403 கிலோ வெள்ளைச் சோளம் கிலோ ரூ.24-க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.9,672-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட விவசாயியின் 200 கிலோ இரத்தசாலி அரிசி, கிலோ ரூ.70 வீதம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.14,000-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

சாத்தங்குடி மற்றும் கல்லுப்பட்டி விவசாயிகளின் 25,950 கிலோ மக்காச்சோளம், கிலோ ரூ.25.10 வீதம் பல்லடத்துக்கு விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.6,51,357-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வாடிப்பட்டி விவசாயிகளின் 10,110 கிலோ KVM-1368 நெல், கிலோ ரூ.22.50-க்கு விலை போனது. இதன் மூலம், ரூ.2,27,475-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

விருதுநகர், எஸ்.பி. நத்தம், தொட்டியபட்டி மற்றும் காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஆறு விவசாயிகளின் 1,578 கிலோ எள், அதிகளவு விலையாக, கிலோ ரூ.160, குறைந்தளவு விலையாக ரூ.140 வீதம் விலை போனது. இதன் மூலம், ரூ.2,64,820-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.35,31,940-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதுவரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3,867 மெட்ரிக் டன் அளவுள்ள பல்வகை விளை பொருள்கள் ரூ.13.52 கோடிக்கு விற்றுத் தரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!