நம்மாழ்வார் அமுதமொழி-4

ர்மபுரி மாவட்டத்தில் சிக்கம்பட்டி என்று ஓர் ஊர். நண்பர் விஜயகுமார் அங்கே தான் வசிக்கிறார். அவருடைய பசுக்களில் ஒன்று நோயுற்றது. கால்நடை மருத்துவர் மருத்துவம் பார்த்தார்; மருந்து கொடுத்தார்; ஊசியும் போட்டார். ஆனாலும், பசு இறந்து போகும் நிலை ஏற்பட்டது. இனி மருந்து கொடுத்துப் பயனில்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்.

சாகப் போகும் மாட்டை ஏன் கட்டிப் போட வேண்டும் என்று விஜயகுமார் அவிழ்த்து விட்டார். பசு கடும் முயற்சி செய்து எழுந்து வெய்யிலுக்குச் சென்றது. வெட்டிப் போடப்பட்டிருந்த வெப்பாலை இலை, வேப்பிலையைத் தின்றது. பிறகு, பிழைத்து விட்டது. மனிதருக்கும் இதுதான் தேவைப்படுகிறது.

கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் வெய்யில், கொஞ்சம் உண்ணா நோன்பு, கொஞ்சம் மருத்துவரிடம் இருந்து விடுதலை. மீண்டும் உடல் பழைய நிலையை எய்துகிறது.

நம் முன்னோர்கள் மாதம் ஒருநாள் அல்லது வாரம் ஒருநாள் உண்ணா விரதம் இருந்தார்கள். அது போதாது. நோயுறும் போது மூன்று நாட்கள் தூய காற்று, தூய நீருடன் மூன்று நாள் உண்ணாமை மேற்கொள்ளுங்கள். உடல் பழைய நிலைக்குத் திரும்பி விடும். பாரதி பாடல் கேட்டதில்லையா?

நோயிலே படுப்பதென்னே கண்ண பெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ண பெருமானே?


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!