செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.
- மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது.
- வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது.
- நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப் பொருள்களில், இரண்டு அல்லது மூன்று பொருள்களைச் சம அளவில் எடுத்துச் சாப்பிடக் கூடாது.
- முள்ளங்கியுடன் உளுந்து சார்ந்த உணவுகளை உண்ணக் கூடாது.
- மணத்தக்காளியுடன், திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.
- மீன் அல்லது இறைச்சி வகைகளைப் பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெய்யை, மீண்டும் உணவில் பயன்படுத்தக் கூடாது.
- வெற்றிலையுடன் எண்ணெய்யைச் சேர்த்து உண்ணக் கூடாது.
- மதுவுடன் சர்க்கரையைச் சேர்த்து உண்ணக் கூடாது.
- கரும்பைத் தின்றதும் நீரைக் குடிக்கக் கூடாது.
செய்தி: தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம் சானட்டோரியம்.