முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.
செயல்படுத்தப்படும் பணிகள்
நுண்ணிய நீர்ப்பிடிப்பில் நீர் அறுவடை நடவடிக்கைகள்.
மானாவாரித் தொகுப்புகளில், தனிப்பட்ட விவசாய நிலங்களில், மண் வரப்புகள் மற்றும் பண்ணைக் குட்டைகளை அமைத்தல்.
வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை அமைத்தல்.
மானாவாரி நிலங்களில், சாகுபடிக்கு ஏற்ப, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட வாடகை மையங்களை, கிராமப்புறங்களில் அமைப்பதன் மூலம், பண்ணை சக்தியை அதிகரித்தல்.
வேளாண் இயந்திர சக்தி அதிகமாக உள்ள, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், வட்டார அளவில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அடங்கிய வாடகை மையங்களை அமைத்தல்.
இந்தப் பணிகள் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும்.
வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைத்தல்.
வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைக்க, விவசாயக் குழுக்களுக்கு மானியம் வழங்குதல்.
இந்தப் பணிகள், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும், வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைத்தல் என்னும் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும்.
மானியம்
நுண்ணிய நீர்ப் பிடிப்பில் நீர் அறுவடைப் பணிகளைச் செயல்படுத்த, 100 சதம் மானியம் வழங்குதல்.
வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க, கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைக்க, 80 சதம் அல்லது அதிகபட்சம் ரூ.8 இலட்சம் மானியம் வழங்குதல்.
வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைக்க, 40 சதம் அல்லது அதிகபட்சம் ரூ.10 இலட்சம் மானியம் வழங்குதல்.
வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டும், இயந்திர சேவை மையங்களை அமைக்க, ஒரு மையத்துக்கு இயந்திரங்களின் விலையில் 50 சதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வழங்குதல்.
வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.