ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளால் மட்டுமே மாவுப் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
பயிர்களைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஓரிரு செடிகளில் மாவுப் பூச்சிகள் தெரியும் போதே கைவினை முறையில்,
அந்தச் செடிகளை அல்லது செடிகளில் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித் தீயிட்டு எரிக்க வேண்டும்.
மரவள்ளி, மல்பெரி நடவுக்கு, மாவுப் பூச்சிகள் தாக்காத கரணைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
மாவுப் பூச்சிகள் தாக்கும் சூழல் இருப்பின், விதைக் கரணைகளை 2 சத மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்துக் கரைசலில் நனைத்து நட வேண்டும்.
மாவுப் பூச்சிகளின் தங்குமிடமாக விளங்கும் பயிர்களுக்கு இடமில்லா வகையில், களைகள் இல்லாமல் நிலத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும்.
பயிருள்ள நிலத்துக்கு அருகில் மாவுப் பூச்சிகள் தாக்கிய பப்பாளி, கொய்யா, களைச் செடிகள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அகற்றி விட வேண்டும்.
மாவுப் பூச்சிகள் தாக்கிய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாமல் இருந்தால், கால்நடைகள் மூலம் மாவுப் பூச்சிகள் பரவுவதைத் தடுக்கலாம்.
அனாசியஸ் பம்பவாலே, புரோமேர்சிடா அன்பேசியாடி வென்ரிஸ், ஹைப்ப ராஸ்பிஸ் மன்ரோனி, ஸ்கிம்னஸ் நுபிலஸ் ஆகிய
இயற்கை ஒட்டுண்ணிகளில் ஒன்றை, எக்டருக்கு பத்தாயிரம் வீதம் விடுவதன் மூலம், பருத்தியைத் தாக்கும் மாவுப் பூச்சிகளை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்த முடியும்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!