துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் duriyan

துரியன் பழம், மருத்துவத் தன்மை மிக்க பழங்களில் ஒன்று. இதன் வாசம் வெறுக்கும் வகையில் இருக்கும். ஆனால், சாப்பிடத் தொடங்கி விட்டால் இது தெரியாது. இந்தத் துரியன் பழம் மற்றும் இலையில் மருத்துவக் குணங்கள் உள்ளன.

சத்துகள்

துரியன் பழத்தில், கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோஃப்ளேவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துகள் உள்ளன.

இதில், வாழைப் பழத்தில் இருப்பதை விட, பத்து மடங்கு கூடுதலாக, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளன.

நூறு கிராம் பழத்தில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து: 69.99 கிராம்

ஆற்றல்: 147 கிலோ/ கலோரி

புரதச்சத்து: 1.47 கிராம்

கொழுப்புச்சத்து: 5.33 கிராம்

சாம்பல் சத்து: 1.22 கிராம்

ரிபோஃப்ளேவின்: 0.200 மி.கி.

மாங்கனீசு: 0.325 மி.கி.

கரோட்டின்: 24 மை.கி.

கால்சியம்: 6.000 மி.கி.

நியாசின்: 1.074 மி.கி.

துத்தநாகம்: 0.280 மி.கி.

மக்னிசியம்: 30.00 மி.கி.

போலிக் ஆசிட்: 36 மை.கி.

+ துரியன் பழத்தைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

+ நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றை, துரியன் வேர் கட்டுப்படுத்தும்.

+ துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும்.

+ துரியன் வேர் மற்றும் இலைகளைக் கொதிக்க வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

+ துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள், எலும்புகள் நலமாக இருக்க உதவும்.

+ துரியன் பழத்தில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம், இரத்தச் சோகை குணமாக உதவும்.

+ துரியன் பழத்தில் உள்ள ஃபைரிடாசின், மன இறுக்கம் அகல உதவும்.

+ துரியன் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், குறைந்த இரத்த அழுத்தம் சரியாகும். தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

+ துரியன் பழத்தில் ரிபோஃப்ளேவின் இருப்பதால், ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

+ துரியன் பழத்தில் பாஸ்பரஸ் இருப்பதால், பற்கள் வலுவாக இருக்கும்.

+ துரியன் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் சரியாகும்.

+ துரியன் பழத்தைப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுவாகும்.

+ துரியன் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் பெருகும்.

+ துரியன் பழத்தில் தயமின், நியாசின் இருப்பதால் நன்றாகப் பசி எடுக்கும்.

+ துரியன் பழத்தோலை அரைத்துத் தடவினால், சொறி, சிரங்கு குணமாகும்.


துரியன் DR.A.RAJKUMAR

ஆ.இராஜ்குமார், கோ.மதன்குமார், தோட்டக்கலைத் துறை, மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!