My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

குதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள கிருஷி, அதிகக் கறவைத் திறனுள்ள, உயர்வகைக் கறவை மாடுகளுக்கு ஏற்ற, மிகத் தரமான குச்சித் தீவனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

உயர்வகை மாடுகளுக்குள்ள உடல்சார் சிக்கல்கள்

உயர்வகைக் கறவை மாடுகள் அதிகளவில் பாலைக் கொடுக்கும் திறன் உள்ளவை. அதனால் அவற்றுக்கு உணவின் மூலம் அதிகளவு எரிசக்தி தேவைப்படுகிறது. அப்படிக் கிடைக்காவிடில், உடலில் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கும் எரிசக்தி, தேவை காரணமாக உறிஞ்சப்படும்.

இதனால், அதிகப் பாலைத் தரும் மாடுகள், உடல் மெலிந்து சோர்ந்து விடும். இந்நிலை நீடித்தால், இந்த மாடுகளின் கருவுறும் திறனும் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்பட்டு விடும். இந்தச் சிக்கல்கள் வராமல் இருப்பதற்காகத் தான், கிருஷி நிறுவனம், KNCபுரோ24+ என்னும் தீவனத்தைத் தயாரித்து வழங்குகிறது.

KNCபுரோ24+ தீவனத்தின் சிறப்புகள்

இது அடர்த்தி மிகுந்த எரிசக்தியுள்ள தீவனம். 24% புரதம் உள்ளது. இதில், ரூமன் சிதவுறாப் புரதம் 45%, ரூமன் சிதவுறும் புரதம் 55% என, மிகச் சரியான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக, உயர்வகைக் கறவை மாடுகளுக்கான எரிசக்தி, கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்தில் இருந்து மட்டுமே பெறப்படுகிறது.

உயர் தரமான தீவனமெனில், அதில் தேவையான அளவில் கொழுப்புச் சத்தும் இருக்க வேண்டும். இது KNCபுரோ24+ தீவனத்தில் உள்ளது.

பாலுற்பத்தியைக் கூட்டுவதுடன், பாலிலுள்ள கொழுப்புச்சத்தும் கொழுப்பற்ற திடச்சத்தும் நீர்த்துப் போகாமல், சரியான அளவில் கிடைக்கச் செய்கிறது. நடைமுறையில், பாலுற்பத்தி அதிகமுள்ள மாடுகளுக்கு அடர் தீவனமும், நார்ச்சத்தும் 35:65 என்னும் சரியான அளவில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், மாடுகள், ரூமன் அசிடோசிஸ் பாதிப்பில் இருக்கும்.

இதனால், பாலின் அளவும் கொழுப்புச் சத்தும் குறைய நேரிடும். இதை எதிர்கொள்ளும் வகையில், KNCபுரோ24+ தீவனத்தில் இயற்கை மூலப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

பொதுவாக, பால் மாடுகளின் கறவைத் திறனும், கறவை நாட்களும், கன்றை ஈன்ற 6 மாதங்களுக்குப் பிறகு பெரிதும் பாதிப்படையும். KNCபுரோ24+ தீவனத்தில் உள்ள சிறப்பு மூலப் பொருள்கள், உயர்வகைப் பால் மாடுகளின் கறவைத் திறனையும், கறவைக் காலத்தையும், கன்றை ஈன்ற நாளிலிருந்து 305 நாட்கள் வரையில் நீட்டிக்கும்.

சரியான காலத்தில் மீண்டும் சினைப் பருவத்தை அடைய, கருத்தரிக்க, ஈற்றுக்காலம் சிறப்பாக அமையத் தேவைப்படும், அனைத்து வகையான தாதுப்புகள் மற்றும் வைட்டமின்கள் சரிவிகித அளவில் இந்தத் தீவனத்தில் சேர்க்கப்படுகின்றன.

மொத்தத்தில், கறவை மாடுகளின் பாலுற்பத்தித் திறனைக் கூட்டி, பண்ணைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் KNCபுரோ24+ தீவனம் தயாரிக்கப்படுகிறது.

அன்றாடம் கொடுக்க வேண்டிய அளவு

பசு மாடு எனில், ஒரு லிட்டர் பாலுற்பத்திக்கு 350 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். இத்துடன் மாட்டின் உடல் பராமரிப்புக்கு என, ஒரு கிலோ தீவனம் கொடுக்கப்பட வேண்டும். எருமையெனில், ஒரு லிட்டர் பாலுற்பத்திக்கு 400 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.

இத்துடன், மாட்டின் உடல் பராமரிப்புக்கு என 1.5 கிலோ தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks