நம்மாழ்வார் அமுதமொழி-5

நம்மாழ்வார் NAMMALVAR

டல் நலத்தை மேம்படுத்தவே நோய்கள் வருகின்றன. நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, டாக்டர் மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் ஆரோக்கியம் குறைகிறது. நாய், பூனை, கன்று, பசு எதுவானாலும் நோய் வரும் போது என்ன செய்கிறது? உண்பதை நிறுத்துகிறது; ஓய்வு கொள்கிறது.

டாக்டர் எம்வேர்டு ஹுக்கர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவம் படித்தவர். இவரிடம் 16 வயது பெண் நோயாளி வந்தார். இவருக்கு வயிற்றில் அல்சர் எனப்படும் நாட்பட்ட புண். இந்தப் பெண் எதை உண்டாலும் வாந்தி எடுத்தார். தண்ணீர், உணவு, மருந்து என, எதை உண்டாலும் வாந்தி எடுத்தார்.

இந்நிலையில், எனக்கும் எனது நோயாளிக்கும் இடையே குறுக்கே வராதே என்று இயற்கை மகாசக்தி சொல்லுவதாக டாக்டர் எட்வர்டு ஹுக்கர் நினைத்தார். அதனால் அந்தப் பெண்ணுக்கு எதையும் கொடுக்கவில்லை. இப்படி, 16 நாட்கள் கடந்து விட்டன. 17 ஆம் நாள், அந்தப் பெண் தண்ணீர் வாங்கிக் குடித்தாள். இரண்டு நாட்கள் கழித்துச் சிறிது உணவையும் சாப்பிட்டாள்.

நீரும் உணவும் உடலுக்கு ஒத்துக் கொண்டன. பிறகு, ஒரு மாதத்தில் பழைய நிலைக்குத் திரும்பினாள். இப்போது டாக்டர் எட்வர்டு ஹுக்கர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, அகிம்சையே மருந்து, மருந்தே இம்சை.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!