தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தோட்டக்கலை

மிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில், 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் உள்ளன.

தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் முக்கிய நோக்கம்.

மேலும், இப்பண்ணைகள், தோட்டக்கலை சார்ந்த தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள், நவீனப் பாசன முறைகளைக் கொண்ட மாதிரி செயல் விளக்கப் பண்ணைகளாகவும் திகழ்கின்றன.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்
அரியலூர்

கீழப்பழுவூர் – 2018, பரப்பு 7.58 எக்டர்.

கோயம்புத்தூர்

ஆனைக்கட்டி – 1986, பரப்பு 12 எக்டர்.

கன்னம்பாளையம் – 2001, பரப்பு 11.20 எக்டர்.

கடலூர்

நெய்வேலி – 1985, பரப்பு 39.53 எக்டர்.

விருத்தாச்சலம் – 1975, பரப்பு 10.43 எக்டர்.

தர்மபுரி

போலயம்பள்ளி – 2013, பரப்பு 2.73 எக்டர்.

திண்டுக்கல்

சந்தையூர் – 2018, பரப்பு 15.20 எக்டர்.

கொடைக்கானல் – 1961, பரப்பு 1.73 எக்டர்.

தாண்டிக்குடி – 1985, பரப்பு 5.45 எக்டர்.

சிறுமலை – 1980, பரப்பு 200.04 எக்டர்.

ஈரோடு

பகுதம்பாளையம் – 2018, பரப்பு 10.00 எக்டர்.

காஞ்சிபுரம்

ஆத்தூர் – 1961, பரப்பு 12.24 எக்டர்.

விச்சந்தாங்கல் – 1982, பரப்பு 23.25 எக்டர்.

மேல் கதிர்பூர் – 1982, பரப்பு 42.63 எக்டர்.

மேலொட்டிவாக்கம் – 1982, பரப்பு 20.60 எக்டர்.

பிச்சிவாக்கம் – 1982, பரப்பு 34.00 எக்டர்.

கன்னியாகுமாரி

கன்னியாகுமாரி – 1922, பரப்பு 12.64 எக்டர்.

பேச்சிப்பாறை – 1967, பரப்பு 6.00 எக்டர்.

கரூர்

முதலைப்பட்டி – 1978, பரப்பு 23.96 எக்டர்.

கிருஷ்ணகிரி

திம்மாபுரம் – 1952, பரப்பு 9.51 எக்டர்.

ஜினூர் – 1980, பரப்பு 121.96 எக்டர்.

மதுரை

பூஞ்சுத்தி – 2012, பரப்பு 5.76 எக்டர்.

நாகை

வண்டுவாஞ்சேரி – 2018, பரப்பு 6.54 எக்டர்.

நாமக்கல்

செம்மேடு – 1974, பரப்பு 11.60 எக்டர்.

படசோலை – 1989, பரப்பு 22.67 எக்டர்.

பெரம்பலூர்

வெங்கலம் – 2018, பரப்பு 4.72 எக்டர்.

புதுக்கோட்டை

குடுமியான்மலை – 1974, பரப்பு 118.68 எக்டர்.

வல்லத்திராக்கோட்டை – 1977, பரப்பு 521.20 எக்டர்.

நாட்டுமங்கலம் – 1985, பரப்பு 53.02 எக்டர்.

சேலம்

ஜிஓ கருமந்துறை – 1981, பரப்பு 419.77 எக்டர்.

மணியார்குன்றம் – 1982, பரப்பு 100.00 எக்டர்.

கருமந்துறை – 1981, பரப்பு 39.35 எக்டர்.

முள்ளுவாடி – 1985, பரப்பு 48.40 எக்டர்.

சிறுமலை – 1987, பரப்பு 8.00 எக்டர்.

சிவகங்கை

தேவகோட்டை – 1985, பரப்பு 81.19 எக்டர்.

நேமம் – 1979, பரப்பு 38.77 எக்டர்.

தஞ்சாவூர்

ஆடுதுறை – 1988, பரப்பு 8.90 எக்டர்.

மருங்குளம் – 1966, பரப்பு 10.70 எக்டர்.

நீலகிரி

பர்லியார் – 1871, பரப்பு 6.25 எக்டர்.

கல்லார் – 1900, பரப்பு 8.92 எக்டர்.

குன்னூர் பழப்பத நிலையம் – 1965, பரப்பு 4.05 எக்டர்.

குன்னூர் பழவியல் நிலையம் – 1948, பரப்பு 10.46 எக்டர்.

காட்டேரி – 1974, பரப்பு 16.96 எக்டர்.

தொட்டபெட்டா – 1969, பரப்பு 2.52 எக்டர்.

தும்மனட்டி – 1956, பரப்பு 9.80 எக்டர்.

நஞ்சநாடு – 1917, பரப்பு 64.00 எக்டர்.

தேவாலா – 1978, பரப்பு 80.00 எக்டர்.

கோல்கிரைன் – 1989, பரப்பு 20.40 எக்டர்.

திருவாரூர்

மூவநல்லூர் – 2018, பரப்பு 8.87 எக்டர்.

திருப்பூர்

சங்கரமாநல்லூர் – 2018, பரப்பு 10.12 எக்டர்.

தேனி

பெரியகுளம் – 1950, பரப்பு 9.32 எக்டர்.

சென்னை

மாதவரம் – 1980, பரப்பு 4.38 எக்டர்.

திருச்சி

தொரக்குடி – 2013, பரப்பு 4.05 எக்டர்.

நெல்லை

வன்னிக்கோனந்தல் – 2018, பரப்பு 10.86 எக்டர்.

வேலூர்

தகரக்குப்பம் – 1985, பரப்பு 34.40 எக்டர்.

கூடப்பட்டு – 1961, பரப்பு 10.08 எக்டர்.

நவ்லாக் – 1981, பரப்பு 84.42 எக்டர்.

விழுப்புரம்

ஏ.சாத்தனூர் – 2018, பரப்பு 10.00 எக்டர்.

விருதுநகர்

பூவானி – 1967, பரப்பு 9.46 எக்டர்.

திருவில்லிபுத்தூர் – 1982, பரப்பு 46.27 எக்டர்.

இராமநாதபுரம்

ஓரியூர் – 2013, பரப்பு 14.77 எக்டர்.

மொத்தம் – 2602.31 எக்டர்.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

ஏழு மாவட்டங்களில் 19 பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை, தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. இவை, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு மையங்களாகத் திகழ்கின்றன. மேலும், தாவரவியல் மாணவர்களின் பயிற்சிக் களமாகவும் விளங்குகின்றன.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்
நீலகிரி

தாவரவியல் பூங்கா, ஊட்டி – 1848, பரப்பு 22.00 எக்டர்.

அரசு ரோஜா பூங்கா, ஊட்டி – 1995, பரப்பு 14.40 எக்டர்.

சிம்ஸ் பூங்கா, குன்னூர் – 1969, பரப்பு 12.14 எக்டர்.

காட்டேரி பூங்கா, அ.தோ. பண்ணை, காட்டேரி – 2011, பரப்பு 2.00 எக்டர்.

தேயிலைப் பூங்கா, தொட்டபெட்டா வண்ணத்துப் பூச்சிப் பூங்கா, தேவாலா – 2015, பரப்பு 1.7 எக்டர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா – 1908, அண்ணா பூங்கா – 2010, பரப்பு 7.93 எக்டர்.

செட்டியார் பூங்கா – 1980, பரப்பு 2.02 எக்டர்.

ரோஜாப் பூங்கா மற்றும் கொய்மலர் செயல்விளக்க மையம் 2018, பரப்பு 4.00

சேலம்

ரோஜாத் தோட்டம் 1975, பரப்பு 15.14 எக்டர்.

ஏரிப் பூங்கா – 1999, பரப்பு 1.27 எக்டர்.

ஏற்காடு ஐந்திணை மரபணுப் பூங்கா – 2012 பரப்பு 10.00 எக்டர்.

ஏற்காடு-1 அரசு தாவரவியல் பூங்கா – 2010, பரப்பு 8.10 எக்டர்.

ஏற்காடு-2அரசு தாவரவியல் பூங்கா – 2010, பரப்பு 8.10 எக்டர்.

அண்ணா பூங்கா – 1999, பரப்பு 1.87 எக்டர்.

சென்னை

செம்மொழிப் பூங்கா- 2010, பரப்பு 3.17 எக்டர்.

மாதவரம் தோட்டக்கலைப் பூங்கா – 2018

நெல்லை

குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்கா – 2012, பரப்பு 14.89 எக்டர்.

இராமநாதபுரம்

ஐந்திணை மரபணுப் பூங்கா, அச்சடிபிரம்பு – 2015, பரப்பு 4.00 எக்டர்.

கன்னியாகுமரி

சுற்றுச்சூழல் பூங்கா – 2018, பரப்பு 6.00 எக்டர்.

மொத்தம் 138.73


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!