கேள்வி:
தேனீ வளர்க்கத் தேவையான தேனீப் பெட்டிகள் எங்கே கிடைக்கும்?
– மைக்கேல் செந்துறையன், வடக்கன்குளம்.
பதில்:
அய்யா, இந்த எண்ணில் பேசினால் தேனீப் பெட்டிகள் கிடைக்கும். கோபாலா தேனீப் பண்ணை, பொள்ளாச்சி, தொலைபேசி: 97503 63932. நன்றி!
கேள்வி:
விவசாயத்துக்கு மானியத்தில் போர் போட போர் வண்டி உள்ளதா?
– தாயுமானவன், காரமடை, கோவை.
பதில்:
அய்யா, உங்கள் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகுங்கள்.
அல்லது, சென்னையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமை அலுவலகத்தை, கீழேயுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் கேளுங்கள். 044 – 29510922, 29510822, 29515322. நன்றி!
கேள்வி:
நான்கு சென்ட் இடத்தில் என்ன செய்யலாம்?
– சக்தி ஆனந்தம், விருத்தாச்சலம்.
பதில்:
எளிய முதலீட்டில் நாட்டுக் கோழிகளை வளர்த்து, முட்டைகளை உற்பத்தி செய்து தினமும் வருமானம் பார்க்கலாம். நன்றி!
கேள்வி:
காய்கறிப் பயிர்களைப் பற்றியும், பட்டங்களைப் பற்றியும் கூறுங்கள்.
– இராஜநாராயணன், தேனி.
பதில்:
அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கம், இங்கே கொடுக்கப்பட்டு உள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
வாழை வளர்ப்புப் பற்றிக் கூறுங்கள்.
– அ.செல்வம், கட்டிக்குளம், மானாமதுரை.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
தென்னங்காயில் சொறி உள்ளது. ஈரியோபைட் சிலந்தி, செம்பான் சிலந்தித் தாக்குதல் எனச் சொல்கிறார்கள். இந்த நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது?
தென்னைக்கு இயற்கை முறையில் எப்படி, எந்த விகிதத்தில் உர மேலாண்மை செய்ய வேண்டும்?
– பிரபாகரன், ஆவரைக்குளம்.
பதில்:
அய்யா, உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்கள், இங்கேயுள்ள இரண்டு கட்டுரைகளில் உள்ளன. நன்றி!
கேள்வி:
கொய்யா நட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதில் என்ன ஊடுபயிர் செய்யலாம்?
– கார்த்திக், போளூர்.
பதில்:
அய்யா, பச்சைப்பயறு, உளுந்து, தக்காளி, பீட்ரூட், சாம்பல் பூசணி, வெள்ளரி, அன்னாசி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் போன்ற பயிர்களை, கொய்யா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம். நன்றி!
கேள்வி:
கரும்புப் பயிருக்கு இயற்கை நுண்ணுரம் தயாரிப்பது எப்படி?
– பன்னீர் செல்வம், எடையூர்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரைகளில் உள்ளது. நன்றி!
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!
கேள்வி:
பண்ணைக்குட்டை அமைக்க அரசு மானியம் கிடைக்குமா?
– நடராஜன், நெடுமானூர்.
பதில்:
அய்யா, மானியம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். நன்றி!
கேள்வி:
பவர் ட்ரில்லர் வாங்க வழிமுறை என்ன? மானியம் உண்டா?
– பா.கர்ணன், மதுரை.
பதில்:
அய்யா, மானியம் கிடைக்க வாய்ப்புண்டு. இதற்கு, உங்கள் ஊரிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். மானியமும் கிடைக்கலாம். நன்றி!
கேள்வி:
கோழிப்பண்ணை, கறவை மாட்டுப் பண்ணை வைக்க அரசு உதவி செய்யுமா? இதற்கான பயிற்சி அல்லது விழிப்புணர்வுக் கிடைக்குமா?
– மயில் ராகவன், காவனூர்.
பதில்:
அய்யா, கோழிப்பண்ணை, பால் பண்ணைப் பயிற்சியைப் பெற நீங்கள் விரும்பினால், உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அந்தப் பயிற்சியின் போது, அரசு மூலம் கிடைக்கும் உதவிகள் குறித்தும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். நன்றி!
கேள்வி:
மூக்கிரட்டையை சாகுபடி செய்தால் சந்தை வாய்ப்பு எப்படி இருக்கும்?
– பேரணை ஸ்ரீதரன், விழுப்புரம்.
பதில்:
மூக்கிரட்டைக் கீரை, காடு மேடெல்லாம் முளைத்துக் கிடக்கும் களைத் தாவரம். ஆனால், இதன் அருமையை இன்று அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அதனால், கிராம மக்கள் ஒரு சிலர் இதைப் பறித்து வந்து, நகர வீதிகளில் வைத்து விற்கிறார்கள்.
முதலில், சிறியளவில் சாகுபடி செய்து, காய்கறிக் கடைகள் மூலம் மக்களிடம் நீங்கள் கொண்டு போகலாம். வரவேற்பைப் பொறுத்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யுங்கள். நன்றி!
கேள்வி:
கால்நடைகளுக்கு நேப்பியர் பசுந்தாள் கொடுக்கலாமா?
– கே.மாணிக்கம், பெரிய குரும்பபாளையம்.
பதில்:
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வகைகள் அனைத்தும், ஆடு மாடுகளுக்கான தீவனம் தான். பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. எனவே, இதில் ஐயம் ஏதும் தேவையில்லை. நன்றி!
கேள்வி:
எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நிலக்கடலை பயிர் செய்ய, நிலத்தைத் தயார் செய்து வைத்து உள்ளேன். எந்த இரக நிலக்கடலையைப் பயிர் வைத்தால் அதிகம் இலாபம் கிடைக்கும்?
– டி.முருகேசன், காஞ்சிப்பாடி.
பதில்:
அய்யா, உங்கள் ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதாக அறிகிறேன். எனவே, திருவள்ளூர், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில், ஆனிப் பட்டமான ஜூன்- ஜூலையில், TMV.7, VRI.2, VRI.Gn.5, VRI.Gn.6, TMV.Gn13 இரகங்களைப் பயிரிடலாம்.
டி.எம்.வி.7: இந்த இரகம் கடந்த 44 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப் படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரும் கொத்து இரகம். 105 நாட்களில் மகசூல் தரவல்லது.
மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்றது. 74 சதம் உடைப்புத் திறனும் 49.6 சதம் எண்ணெய்ச் சத்தும் கொண்டது.
டி.எம்.வி.13: இது சிவப்புப் பருப்புகளைக் கொண்ட, அதிக எண்ணெய் சத்துள்ள இரகமாகும். இதன் வயது 105 நாட்கள். பயிர் முதிர்வுக் காலத்தில் ஏற்படும் வறட்சியைத் தாங்கும் இரகம். மானாவாரியில் எக்டருக்கு 1613 கிலோ மகசூல் தரவல்லது.
வி.ஆர்.ஐ. 2: இதன் உடைப்புத் திறன் 75 மற்றும் எண்ணெய் சத்து 48 சதம். வயது 165 நாட்கள். மகசூல் எக்டருக்கு 1790 கிலோ.
வி.ஆர்.ஐ. 3: கொத்து இரகம், 95 நாட்களில் மகசூல் தரவல்லது. 75 சதம் உடைப்புத் திறன், 49.5 சதம் எண்ணெய் கொண்டது. கார்த்திகைப் பட்டம் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. எக்டருக்கு 1670 கிலோ மகசூல் தரவல்லது.
வி.ஆர்.ஐ.6: வறட்சியைத் தாங்கி வளரும் இரகம். தமிழகமெங்கும் மணற்பாங்கான மற்றும் செம்புறை மண்ணில் மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது.
105 நாட்களில் மானாவாரியில் எக்டருக்கு 1916 கிலோ மகசூல் பெறலாம். 50 சதம் எண்ணெய்ச் சத்துள்ளது.நன்றி!
கேள்வி:
இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்குமா?
– ந.ரேவதி, சிட்கோ முதலிபாளையம்.
பதில்:
அம்மா, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. எனவே, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகுங்கள். நன்றி!
கேள்வி:
தண்ணீர் உப்பாக உள்ளது. அதை மாற்றுவது எப்படி?
– அருணாசலம், மைலம்பாடி, பவானி.
பதில்:
அய்யா, உங்கள் கிணற்று நீரை சோதனை செய்யுங்கள். சோதனையில் கிடைக்கும் முடிவுப்படி, தீர்வு சொல்வார்கள். நீரைச் சோதனை செய்ய உங்கள் பகுதி விவசாய அதிகாரிகளை அணுகுங்கள். நன்றி!
கேள்வி:
ஐயா வணக்கம். தென்னந்தோப்பில், படிப்படியாகக் காய்ப்புக் குறைவதற்கு காரணம் என்ன?
– உமாமுனீஸ், மதுரை.
பதில்:
அய்யா/அம்மா, தேங்காய்க் காய்ப்பு அதிகமாக, இங்கேயுள்ள கட்டுரைகளில் தீர்வுகள் உள்ளன. படியுங்கள். நன்றி!
கேள்வி:
மாட்டின் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? கறவை மாடுகள் எப்படி இருக்க வேண்டும்?
– ஜெபா, புதுகை.
பதில்:
அய்யா, உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கேயுள்ள கட்டுரைகளில் தரப்பட்டு உள்ளன. நன்றி!
கேள்வி:
மாடு சினைப் பிடிக்கவில்லை. ஐந்து முறை ஊசி போட்டு இருக்கேன்.
– அங்கமுத்து, மங்காகவுண்டனூர்.
பதில்:
அய்யா, உங்கள் கால்நடை மருத்துவரிடமே இதற்குத் தீர்வு கேளுங்கள். அடுத்து, கருப்பையைச் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவத்தைச் செய்து பாருங்கள். அதற்கு இங்கேயுள்ள கட்டுரையைப் படியுங்கள். நன்றி!
கேள்வி:
மின்வேலி அமைக்க, மானியம் 100% வழங்கப்படுமா? இல்லை என்றால் அந்த நாற்பது சதவீதம் வாங்குவதற்கான முறையைத் தெளிவாகச் சொல்லுங்கள்.
– இரமேஷ்,கிருஷ்ணகிரி.
பதில்:
அய்யா, உங்கள் கேள்விக்கான விளக்கத்தை அறிய, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையை அணுகுங்கள். நன்றி!
கேள்வி:
காளான் வளர்ப்புப் பயிற்சி வேண்டும்.
– சிவா, ஆற்காடு.
பதில்:
அய்யா, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்புப் பயிற்சி கிடைக்கும். எனவே, உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகுங்கள். நன்றி!
கேள்வி:
வம்பன் 8 இரகம் உளுந்தைப் பற்றிக் கூறுங்கள்.
– ஜெகதீசன், கொங்கராயபாளையம்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் தரப்பட்டுள்ளது. நன்றி!
கேள்வி:
கோமாரி நோயால் மாடுகளின் கால்களில் காயம் புண் வருகிறது. இதை எப்படித் தடுப்பது?
– கே.மகாலட்சுமி, மடயாத்தூர்.
பதில்:
அம்மா, உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். மேலும், இயற்கை முறையில் சிகிச்சை செய்யும் வழிமுறை இங்கே தரப்பட்டுள்ளது. அதையும் படியுங்கள். நன்றி!
கேள்வி:
பால் பண்ணை அமைப்பது எப்படி?
– இரவி, திருவண்ணாமலை.
பதில்:
அய்யா, முதலில் பால் பண்ணைப் பயிற்சியை எடுங்கள். உங்களுக்கான அத்தனை விளக்கங்களும் அந்தப் பயிற்சியின் மூலம் கிடைக்கும்.
திருவண்ணாமலையில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகினால், உங்களுக்குப் பயிற்சி கிடைக்கும்.
Assistant Professor and Head,
Veterinary University Training and Research Centre,
Bye Pass Road,
Near to Govt. Medical College,
Vada Andapattu,
Tiruvannamalai – 606 604.
தொலைபேசி: 91-4175-298258. நன்றி!
சந்தேகமா? கேளுங்கள்!