My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


வேளாண்மையை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்!

வேளாண்மை - அறுவடை இயந்திரம்

வேளாண்மையை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்.

நோக்கம்

வேளாண் இயந்திர சக்தியை மேம்படுத்தும் வகையில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் வேளாண்மை இயந்திரமயத்தை ஊக்குவித்தல்.

நிதி ஆதாரம்
விளம்பரம்:


மத்திய அரசு 60 சதம், மாநில அரசு 40 சதம்.

மானியங்களும் சலுகைகளும்

+ ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதம் மானியம்.

+ இதர விவசாயிகளுக்கு 40 சதம் மானியம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ ஆதி திராவிட பழங்குடியினச் சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.

வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்

கிராமப்புறத் தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாயச் சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வட்டார அளவில், வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவுவதற்கு, 40 சதம் மானியம் வழங்கப்படும்.

கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்

பதிவு செய்யப்பட்ட விவசாயக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கிராம அளவில், வேளாண் இயந்திர வாடகை மையத்தை அமைக்க, 80 சதம் மானியம் வழங்கப்படும்.

திட்டப் பகுதி

சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களில் உள்ள தனிப்பட்ட விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் வழங்குதல்.

சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களில், வட்டார அளவில், வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைத்தல்.

சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில், கிராம அளவில், வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைத்தல்.

செயல்படுத்தப்படும் பணிகள்

டிராக்டர், ரோட்டவேட்டர் என்னும் சுழற் கலப்பை, எட்டுக் குதிரைத் திறனுக்கு மேற்பட்ட பவர்டில்லர், நெல் நாற்று நடவு இயந்திரம், விசைக் களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி, அறுவடை இயந்திரம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்றவற்றை, தனிப்பட்ட விவசாயிகள் வாங்க, வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைக்க மானியம் வழங்குதல்.

தகுதி

தனிப்பட்ட விவசாய இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கு: அனைத்து விவசாயிகள்.

வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவுவதற்கு: கிராமப்புறத் தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாயச் சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்.

கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைப்பதற்கு: பதிவு செய்யப்பட்ட விவசாயக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள, வேளாண்மை உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்: