பச்சை பூமியின் ஐந்தாவது விவசாயக் கண்காட்சி தேனியில் சிறப்பாக நடைபெற்றது. தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள மதுராபுரி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், இந்த ஜூலை மாதம் 8, 9, 10, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்ற கண்காட்சியில், நமது பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
உழவு, விதைப்பில் தொடங்கி அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள், விவசாய வளர்ச்சிக்கு உதவும் ஏராளமான சிறப்பு அரங்குகள் இடம் பிடித்திருந்தன.
மேலும், தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பால்வளத்துறை மற்றும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி, தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி, கனரா வங்கி ஆகியவற்றின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வீட்டுத் தேவைப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ அரங்குகளும் இடம் பெற்று இருந்தன.
கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களும் தேனி மாவட்ட விவசாயிகள், ஏனைய பொது மக்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், கண்காட்சி ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றுக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர்.
சந்தேகமா? கேளுங்கள்!