கால்நடைகளைக் கொல்லும் கொடுமையான சப்பை நோய்!

சப்பை நோய் Sappai

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021

கால்நடைகளைக் கொல்லும் அளவுக்குக் கொடுமையானது சப்பை. இந்தச் சப்பை நோய்க்கு, வந்த பிறகு சிகிச்சை எடுப்பதை விட, வருமுன் தடுப்பதே சிறந்தது. இந்நோய் கிளாஸ்டிரியம் சவாய் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளில் இருக்கும் மாடுகளைச் சப்பை நோய் பெரும்பாலும் தாக்கும்.

நோய் அறிகுறிகள்

சப்பை நோய்க்கு உள்ளான மாடுகளுக்குத் திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும். இந்நோயின் தொடக்க நிலையில் பின்னங் கால்களின் தொடையில் அல்லது முன்னங்காலின் மேற்பகுதியில் அல்லது கழுத்து போன்ற சதைப் பிடிப்புள்ள மற்ற பகுதிகளில், சூடான, தொட்டால் வலியை ஏற்படுத்தக் கூடிய அளவில் பெரிய வீக்கம் ஏற்படும். விரலைக் கொண்டு அழுத்தினால், சிறிதளவு நறநறவென்ற சப்தம் ஏற்படுவதைப் போலத் தோன்றும்.

மாடுகள் நடக்க முடியாமல் அவதிப்படும். காய்ச்சல் அதிகமாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, நிமிடத்துக்கு 100-120 முறை துடிக்கும். மேலும், இரைப்பை இயங்காத் தன்மை காணப்படும். சப்பை நோய் தாக்கிய 12-36 மணி நேரத்தில் மாடுகள் இறந்து விடும்.

தடுப்பு முறைகள்

ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தவறாமல் மாடுகளுக்குச் சப்பை நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும். கன்றுகளுக்கு ஆறு மாதத்துக்கு மேல் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்து,  ஆண்டுதோறும் பருவமழை பெய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தடுப்பூசியைப் போட வேண்டும். அதாவது, செப்டம்பர் மாதத்தில் சப்பை நோய்த் தடுப்பூசியைப் போடுவதன் மூலம், இந்நோயில் இருந்து மாடுகளைக் காக்கலாம்.


PB_DEVAKI

முனைவர் .தேவகி,

வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் கா.செந்தில் குமார்,

கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்,

முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading