My page - topic 1, topic 2, topic 3

நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

டந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், கோழியிறைச்சி உற்பத்தியில் நான்காம் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தச் சாதனையில், நவீனக் கோழியின உற்பத்தி சார்ந்த செயல்களுடன், நாட்டுக்கோழியின வளர்ச்சிக்கும் முக்கியப் பங்குண்டு.

கோழியின் வளர்ச்சித் திறனில் அதன் மரபுசார் குணங்களுக்குப் பங்கிருப்பதைப் போல, அதற்குக் கொடுக்கப்படும் சமச்சீர் உணவுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. தேவையான சத்துகள் அடங்கிய தீவனமே, குஞ்சுகளின் விரைவான வளர்ச்சிக்கும், அதிக உடல் எடைக்கும் காரணமாக அமைந்து, பண்ணையின் உயர் இலாபத்தை உறுதி செய்யும்.

ஒரு நாட்டுக் கோழியானது, முதல் நாள் குஞ்சிலிருந்து அதன் 16 வாரம் வரையில், அதாவது அதை விற்கும் காலம் வரையில், 4-5 கிலோ தீவனத்தைச் சாப்பிட்டு, 1.3-2.5 கிலோ எடையை அடையும். இவ்வகையில், கிருஷி நாட்டுக்கோழித் தீவனம், நாட்டுக்கோழி வளர்ப்புக்குப் பேருதவியாய் இருக்கிறது.

இந்தத் தீவனத்தில், மக்காச்சோளம், சோயாப் புண்ணாக்கு, அரிசித் தவிடு, வைட்டமின்கள், தாதுப்புகள் மற்றும் தேவையான அனைத்துச் சத்துப் பொருள்களும் சரியான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. இரத்தக் கழிச்சல் நோயைத் தடுக்கும் சிறப்பு மருந்துகளும் இதில் கலக்கப்பட்டுள்ளன.

நன்கு செரித்தல், சிறந்த தீவன மாற்றுத்திறன், அதிக உடல் எடை, பளபளக்கும் இறகுகள், மென்மை மற்றும் சுவையான இறைச்சி, இறப்புக் குறைப்பு ஆகியவற்றுக்கு, கிருஷி நாட்டுக்கோழித் தீவனம் உறுதியளிக்கிறது. குருணை வடிவிலான கிருஷி நாட்டுக்கோழித் தீவனம், ஸ்டாட்டர், ஃபினிஷர் ஆகிய இரு வகைகளில், 50 கிலோ பாலித்தீன் பைகளில் கிடைக்கிறது.

கிருஷி ஸ்டாட்டர் குஞ்சுத் தீவனத்தில், குறைந்தளவு உலர் நிலையில் 20% புரதம், 3,000 கிலோ கலோரி உறுதிபடுத்தப்பட்ட சக்தி, 4% கொழுப்பு, 1.0% கால்சியம், 0.5% மொத்த பாஸ்பரஸ் மற்றும் அதிகளவு உலர் நிலையில், 11% ஈரப்பதம், 3% நார்ச்சத்து, 0.4% உப்புச்சத்து ஆகியன உள்ளன. இந்தத் தீவனத்தை, முதல் நாள் குஞ்சுப் பருவத்தில் இருந்து 8 வாரம் வரை கொடுக்க வேண்டும்.

கிருஷி நாட்டுக்கோழி ஃபினிஷர் தீவனத்தில், குறைந்தளவு உலர் நிலையில் 18% புரதம், 3,100 கிலோ கலோரி உறுதிபடுத்தப்பட்ட சக்தி, 5% கொழுப்பு, 1.0% கால்சியம், 0.42% மொத்த பாஸ்பரஸ் மற்றும் அதிகளவு உலர் நிலையில், 11% ஈரப்பதம், 3% நார்ச்சத்து, 0.4% உப்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. இந்தத் தீவனத்தை, 8 வாரத்திலிருந்து 16 வாரம் வரை கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களைச் சார்ந்தே வளர்ந்துள்ளது. 70% இந்திய மக்கள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாட்டுக்கோழிப் பண்ணைகளும், புறக்கடைக் கோழி வளர்ப்பும் தொடர்ந்து துணை புரியும் என்பதால், நாட்டுக் கோழிகளுக்கு மிகச் சரியான தீவனத்தை அளித்துப் பயனடைவோம். மேலும் விவரங்களுக்கு: 04294-223466.


கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

தொழில் நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை,

பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks