கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

கால்நடை Bargur Mountain Cows

ந்தியாவில் சிறு, குறு விவசாயிகள் தான் பெரும்பாலும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய நோய்களில் முக்கியமானது கருச்சிதைவு நோய். இது, முக்கிய விலங்குகள் மூலம் மக்களுக்கும் பரவக்கூடிய கொடிய நோயாகும்.

நோய்க் காரணிகள்

வெள்ளாடுகளைத் தாக்கும் பு.மெலிட்டென்ஸ். மாடுகளைத் தாக்கும் பு.அபார்ட்டஸ். நாய்களைத் தாக்கும் பு.கேனிஸ். பன்றிகளைத் தாக்கும் பு.சுயிஸ். விலங்குகள் மூலம் பரவும் இந்த நோய்க் காரணிகள் மக்களுக்கும் நோயை ஏற்படுத்தும்.

பொருளாதார இழப்பு

கால்நடைகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு நோயால், இனப்பெருக்கச் சிக்கல்கள் உண்டாகும். அதாவது, கால்நடைகளுக்குச் சினைப் பிடிக்காமல் இருப்பது, இனப்பெருக்க உறுப்பில் புண் உண்டாவது, கருச்சிதைவு ஏற்படுவது, கன்று இறப்பது போன்றவை நிகழ்வதால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும். குறிப்பாக இந்நோய், சினையாக உள்ள கால்நடைகளைத் தான் தாக்கும்.

பரவும் விதம்

கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும். நோயுற்ற கால்நடைப் பொருள்களை உண்பதன் மூலம் பரவும். காற்றின் மூலம் பரவும். சரியாகக் கொதிக்க வைக்காத பாலின் மூலம் பரவும். தோல் காயங்கள் மூலம் பரவும்.

நோய் அறிகுறிகள்

கால்நடைகளில் 7 முதல் 9 மாதச் சினைக் காலத்தில் கருச்சிதைவு ஏற்படும். கருப்பையிலேயே கன்று இறந்து விடும் – (fig2). கால்நடைகள் சினைப் பிடிக்காமல் இருக்கும். இனப்பெருக்க உறுப்பில் புண் உண்டாகும்.

உள் பாதிப்புகள்

இந்நோயால், கருப்பையில் மிக மென்மையான கட்டிகள் உருவாகும்-(fig2). மேலும், உள்ளுறுப்புகளில் சிறு கட்டிகள் உண்டாகும்.

மாதிரி சேகரித்தல்

இரத்தம், ஊநீர், பால் மற்றும் திசுக்களைத் தகுந்த குளிரூட்டுச் சாதனத்தில் வைத்து, கூரியர் அல்லது விரைவு அஞ்சல் மூலம் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

தடுப்பு முறைகள்

பதப்படுத்திய பால் பொருள்களை, நன்றாகச் சமைத்து உண்ண வேண்டும். கால்நடைகளைக் கையாளும் போது தகுந்த பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். மக்களிடம் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கிடேரிக் கன்றுகளுக்கு மூன்று மாத வயதில் தடுப்பூசியைப் போட வேண்டும். நெடுநாட்கள் பயனளிக்கும் ஆக்சி டெட்ராசைக்கிளின், ஜென் டாமைசின் ஆகிய எதிர் உயிரிகள் மூலம் ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டும்.


கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவு, கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading