My page - topic 1, topic 2, topic 3

வளர்ப்புப் பன்றிகள் தேர்வு!

pigs

ன்றிப் பண்ணை சிறப்பாக, பொருளாதார வளர்ச்சியைத் தருவதாக அமைய, சரியான பன்றிகளைத் தேர்வு செய்தல் மிகமிக அவசியம்.

இவ்வகையில் தாய்ப் பன்றிகளும், ஆண் பன்றிகளும் எப்படியிருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.

தாய்ப்பன்றி

அதிகப் பிறப்பு எடையுள்ள, உயரிய இனத்தில் பிறந்த 6-8 மாதப் பெண் பன்றிக் குட்டிகளை வாங்கி வளர்க்க வேண்டும்.

சில நேரங்களில் ஓரிரு ஈற்றுகள் முடிந்த தாய்ப் பன்றிகளை வாங்கி வளர்க்கலாம்.

அந்தப் பன்றிகளின் மூதாதையரின் உற்பத்திப் பண்புகளைப் பார்த்து அல்லது

தாய்ப் பன்றிகள் முந்தைய ஈற்றில் ஈன்ற குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் திறனைக் கண்டறிந்து வாங்க வேண்டும்.

பெண் பன்றிகள் ஒவ்வொரு முறையும் 8-12 குட்டிகளை ஈனும் திறனில் இருக்க வேண்டும்.

தாய்ப் பன்றியிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது, ஓரிரு குட்டிகளைத் தவிர மற்ற குட்டிகள் நல்ல வளர்ச்சியில் இருக்க வேண்டும்.

முக்கியமாக, பிறக்கும் குட்டிகளின் உடல் எடை, தோற்றம், உடலமைப்பு ஆகியவற்றைப் பார்த்து வாங்க வேண்டும்.

தாய்ப் பன்றியின் முதுகுப் பகுதி நேர் வளைவாக, வயிற்றுப் பகுதி நேர்க் கோட்டில் இருக்க வேண்டும்.

தோள் பட்டைக்குப் பின்புறம், அதாவது, நெஞ்சுப் பகுதி அகன்று இருக்க வேண்டும்.

முதுகு, முன்னங் கால்கள், தொடைப் பகுதி ஆகியன சதைப் பிடிப்புடன் இருக்க வேண்டும்.

பெண் பன்றிகளை, பண்ணைப் பதிவேடுகளைப் பார்த்து வாங்குவது நல்லது.

பன்றிகள் நன்கு வளர்ந்து, போதிய இடைவெளியில் 12-14 பால் காம்புகளுடன் இருக்க வேண்டும்.

ஈனும் போதும், ஈற்றுக்குப் பின்னும், குட்டிகளைப் பார்ப்பதற்கு அறைக்குள் அனுமதிக்கும் தாய்ப் பன்றிகள் பழக உகந்தவை.

அத்தகைய பண்புள்ள தாய்ப் பன்றிகளைப் பண்ணையில் வளர்ப்பது நல்லது.

கிடாப்பன்றி

ஓர் ஈற்றில் அதிகக் குட்டிகளை ஈனும் தாய்ப் பன்றிக்குப் பிறந்த கிடாக் குட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தத் தகவலைப் பெரிய பண்ணைகளில் பராமரிக்கும் பதிவேடுகளின் மூலம் அறியலாம்.

மேலும், அத்தகைய பன்றிகளுக்கு மிக வேகமாக வளரும் திறன் மற்றும் தீவன மாற்றுத் திறன் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

தோற்றத்தில் திடமாக, சீரான உடலமைப்பு மிக்கதாக, தொடை மற்றும் கழுத்துப் பகுதி சதைப் பிடிப்புடன் இருக்க வேண்டும்.

இளம் கிடாப் பன்றியின் கால்கள் வலுவாக, சீரான நடையுடன் இருக்க வேண்டும்.

பயந்த மற்றும் சண்டைக் குணமில்லாத பன்றியாக இருக்க வேண்டும்.

தாய்ப் பன்றியும் சரி, கிடாப் பன்றியும் சரி, சுறுசுறுப்பாகச் சுற்றித் திரியும் திறனில் இருக்க வேண்டும்.

விரைவாக வளரும் வகையில், அதாவது, ஆறு மாதங்களில் 60-70 கிலோ என்னும் விற்பனை எடையை அடையும் பன்றிகளாக இருக்க வேண்டும்.


முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks