மீன் உணவின் நன்மைகள்!

மீன்

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச்சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தருவதாக உள்ளது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மையைத் தரும் ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் உள்ளன. மிகவும் அவசியமான இந்தச் சத்துகளை மனித உடலில் உற்பத்தி செய்ய முடியாது என்பதால், மீன் உணவு நமக்கு மிகவும் தேவையாகிறது.

ஒரு மனிதனுக்கு ஒருநாளில் தேவைப்படும் புரதம் என்பது, பொதுவாக, அவனது உடல் எடையில், ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் உள்ளது. இதுவே, குழந்தைக்கு 1.5 கிராம், கர்ப்பிணிப் பெண்ணுக்கு 15 கிராம், பாலூட்டும் தாய்க்கு 18 முதல் 25 கிராம் எனத் தேவைப்படும்.

மீன் உணவு எளிதாகச் செரிக்கும் என்பதால், சிறியோர் முதல் பெரியோர் வரையிலான அனைவரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்குத் தொடர்ந்து மீனைக் கொடுத்து வந்தால், அவர்களின் உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பாற்றல் கூடும்; இதிலுள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வராமல் காக்கும்.

கண் பார்வை, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஏ, பி, பி12, சி, டி, ஈ, கே ஆகிய உயிர்ச் சத்துகள் மீனில் உள்ளன. கர்ப்பிணிகள் தரமான மீன்களைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், குழந்தையின் வளர்ச்சி சீராக அமையும்; குறைப் பிரசவம் தடுக்கப்படும்.

மேலும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகமாக ஏற்படும் அனீமியா என்னும் இரத்தச்சோகை, காய்டர் என்னும் முன்கழுத்துக் கழலை ஆகியன வருவது தடுக்கப்படும். மீனில், தாதுச் சத்துகளான, கால்சியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், தாமிரம், அயோடின் ஆகியன உள்ளன.


மீன் Dr.K.Sivakumar e1628865572936

முனைவர் கி.சிவக்குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading