My page - topic 1, topic 2, topic 3

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன்.

வெள்ளைக் கழிச்சல் நோய்

பத்துக் கோழிகளுக்கான பொருள்கள்: சின்ன சீரகம்: 10 கிராம்,

கீழாநெல்லி: 50 கிராம்,

மிளகு: 5 கிராம்,

வெங்காயம்: 5 பல்,

மஞ்சள் தூள்: 5 கிராம்,

பூண்டுப்பல்: 5 பல்.

சிகிச்சை: வெங்காயம் மற்றும் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். சீரகம் மற்றும் மிளகை இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து வைத்துக் கொண்டு, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும்.

மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சிறு சிறு உருண்டைகளாக உட்செலுத்த வேண்டும்.

கழிச்சல் நோய்

பத்துக் கோழி அல்லது 5 வான்கோழிக்கானவை: சின்னச் சீரகம்: 10 கிராம்,

கசகசா: 5 கிராம்,

மிளகு: 5 கிராம்,

வெந்தயம்: 5 கிராம்,

மஞ்சள் தூள்: 5 கிராம்,

பெருங்காயம்: 5 கிராம்.

சிகிச்சை: மேற்கண்ட பொருள்களை கருக வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும்.

கோழியம்மை நோய்

சிகிச்சை 1: தேவையான பொருள்கள்: சின்ன சீரகம்: 20 கிராம்,

துளசியிலை: 50 கிராம்,

வேப்பிலை: 50 கிராம்,

சூடம்: 5 கிராம்,

மஞ்சள் தூள்: 10 கிராம்,

பூண்டுப்பல்: 10 பல்.

செய்முறை: மேற்கண்ட பொருள்களை நன்கு அரைத்து, விளக்கெண்ணெய் 100 மில்லி, வேப்ப எண்ணெய் 100 மில்லியை, சம அளவில் கலந்து லேசாக வெதுப்பி, பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.

சிகிச்சை 2: பத்துக் கோழிகளுக்கான பொருள்கள்: சின்ன சீரகம்: 10 கிராம்,

துளசியிலை: 10,

வேப்பிலை: 10,

மிளகு: 5,

மஞ்சள் தூள்: 5 கிராம்,

பூண்டுப்பல்: 5 பல்.

சிகிச்சை: மிளகை இடித்து மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும்.

மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளே செலுத்த வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks