கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,
நோக்கங்கள்
+ புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை, சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடிp பரப்பை அதிகரித்தல்.
+ வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
+ உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்,
நிதி ஆதாரம்
+ சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் – மாநில அரசு திட்டம்.
+ ஒருங்கிணைந்த வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம்,
ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் – துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்புத் திட்டங்களின் செயல்பாடுகள், அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
மானியங்களும் சலுகைகளும்
+ அனைத்து இனங்களுக்கும் 100 சதம் மானியம்.
+ பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின் நெறிமுறைகளின்படி நிர்ணயித்து உள்ள உச்சவரம்புத் தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.
திட்டப்பகுதி
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் தெரிவு செய்யப்பட்ட 1,997 கிராமங்கள்.
செயல்படுத்தப்படும் இனங்கள்
+ பாசனப் பரப்பு இல்லாத, தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில், ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு போன்ற, சமுதாய நீர் ஆதாரத்தை உருவாக்குதல்.
+ ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, ஆழ்துளைக் குழாய்க் கிணறு மூலம் நீர் ஆதாரத்தை உருவாக்குதல்.
+ பண்ணைக் குட்டைகளை அமைத்தல்.
+ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறு பாசனக் குளங்கள், ஊருணிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல்.
தகுதி
+ தேர்ந்தெடுக்கப்பட்ட 1,997 கிராமங்களின் திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
+ தேர்ந்தெடுக்கப்பட்ட 1,997 கிராமங்களின் திட்டப் பகுதிகளில் உள்ள, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள்.
அணுக வேண்டிய முகவரி
சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண் பொறியியல் துறை.
தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை