My page - topic 1, topic 2, topic 3

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’

“தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’

“இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“நன்கு புளித்த மோர் 5 லிட்டர், தேங்காய்கள் 10, இளநீர் 1/2 லிட்டர், ஏதேனும் ஒரு பழம் அரை கிலோ.. இதே அளவில், தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்..’’

“சரிண்ணே.. இதைத் தயாரிக்கிறது எப்பிடிண்ணே?..’’

“புளித்த மோரையும் இளநீரையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலக்க வேண்டும்.. இத்துடன் பத்துத் தேங்காய்களைத் துருவிச் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.. இல்லையெனில், தேங்காய்த் துருவலையும், பழத்தையும் நைலான் வலையில் கட்டிக் கரைசலுக்குள் போடலாம்.. இப்படித் தயாரித்த கலவை, ஒரு வாரத்துக்குப் பிறகு நன்கு நொதித்துப் புளிக்கும்.. இதுதான் தேமோர்க் கரைசல்.. இப்போது இதை வடிகட்டி, சுத்தமான தேமோர்க் கரைசலாக வைத்துக் கொள்ளலாம்..’’

“இதை எப்பிடிண்ணே பயன்படுத்துறது?..’’

“இந்தக் கரைசலை, பத்து லிட்டர் நீருக்கு 300-500 மில்லி என்னுமளவில் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.. இல்லையெனில், 100 லிட்டர் தொல்லுயிரிக் கரைசலுடன், இந்தக் கரைசலை 5-10 லிட்டர் என்னுமளவில் சேர்த்து, ஒருநாள் வைத்திருந்து, பாசன நீருடன் கலந்தும் விடலாம்..’’

“இதனால என்ன நன்மைண்ணே?..’’

“சைட்டோசைம் என்னும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது.. அதனால், சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும் விரட்டுகிறது.. பூசண நோயைத் தாங்கி வளரும் ஆற்றலைப் பயிர்களுக்குக் கொடுக்கிறது.. பயிர்களின் பூக்கும் ஆற்றலைப் பெருக்குகிறது..’’

“நல்லா தெரிஞ்சுக்கிட்டேன்.. வர்றேண்ணே..’’


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks