My page - topic 1, topic 2, topic 3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்

நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்!

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி!

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!

பூமியைப் போலப் பொறுமை வேண்டும்!

முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்!

எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு!

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்!

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்!

ஆடு கொழுத்தால் இடையனுக்கு இலாபம்!

கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்!

விளையும் பயிர் முளையிலே தெரியும்!

புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தது போல!

வெட்டுறவனுக்கு நிழல் தரும் மரம், தோண்டுறவனுக்கு இடம் தரும் மண்!

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்!

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே!

வீட்டுக்குச் செல்வம் மாடு, தோட்டத்துகுச் செல்வம் முருங்கை!

எருமை வாங்கும் முன்னே நெய் விலையைக் கூறாதே!

கள்ளிக்கு எதுக்கு முள்வேலி!

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks