My page - topic 1, topic 2, topic 3

தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தொகுப்பு!

திட்டங்கள்
  1. பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY)
  2. தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM)
  3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
  4. மானாவாரிப் பகுதி மேம்பாடு (RAD)
  5. பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)
  6. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (IHDS)
  7. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
  8. தேசிய ஆயுஷ் இயக்கம்-மருத்துவப் பயிர்கள் (NAM-MP)
பயன்பெறத் தேவையான ஆவணங்கள்
  1. ஆதார் அட்டை நகல்
  2. குடும்ப அட்டை நகல்
  3. சிறு-குறு விவசாயி சான்றிதழ்
  4. புகைப்படம்
  5. நிலம் தொடர்பான ஆவணங்கள்
தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்கள்
  1. வட்டாரத் தோட்டக்கலை உதவி அலுவலர்
  2. தோட்டக்கலை அலுவலர்
  3. தோட்டக்கலை உதவி இயக்குநர்

1. பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY)
தோட்டக்கலைப் பயிர்களுக்குச் சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்தல் 
  1. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம் கிடைக்கும்.
  2. இதர விவசாயிகளுக்கு 75% மானியம் கிடைக்கும்.
  3. ஒரு விவசாயிக்கு 5 எக்டருக்கான மானியம் கிடைக்கும்.

2. தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH-NHM)
உயர்தர நாற்றங்கால் அமைப்பதற்கான மானியம் 40-50%
  1. உயர்தர நாற்றங்கால் அமைக்க எக்டருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.
  2. சிறிய நாற்றங்கால் அமைக்க எக்டருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.
  3. புதிய திசு வளர்ப்புக் கூடம் அமைக்க ரூ.50 இலட்சம் வழங்கப்படும்.
பரப்பை விரிவாக்கம் செய்ய 40% மானியம்
  1. காய்கறிகள், பழ வகைகள், மலைப் பயிர்கள்
  2. குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வீரியக் காய்கறி நாற்றுகள், நடவுச் செடிகள் வழங்கப்படும்.
காளான் உற்பத்திக்கு 40% மானியம்
  1. காளான் உற்பத்திக் கூடம் அமைக்க ரூ.8 இலட்சம் வழங்கப்படும்.
  2. காளான் வித்து உற்பத்திக் கூடம் அமைக்க ரூ.6 இலட்சம் வழங்கப்படும்.
பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க 50% மானியம்
  1. பழைய மா, முந்திரித் தோப்புகளைப் புதுப்பிக்க, எக்டருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
நீர் ஆதாரங்களை உருவாக்க 50-100% மானியம்
  1. சமுதாய நீர்த் தேக்கம் அமைக்க ரூ.20 இலட்சம் வழங்கப்படும்.
  2. தனி நபருக்கான நீர்த் தேக்கம் அமைக்க ரூ.75,000 வழங்கப்படும்.
பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடிக்கு 50% மானியம்  
  1. பசுமைக்குடில் அமைக்க ச.மீ.க்கு ரூ.467.50 வழங்கப்படும். இதில், ஒரு பயனாளி அதிகளவாக 4,000 ச.மீ. பரப்புக்கான உதவியைப் பெற முடியும்.
  2. நிழல்வலைக் குடில் அமைக்க ச.மீ.க்கு ரூ.355 வழங்கப்படும். இதில், ஒரு பயனாளி அதிகளவாக 4,000 ச.மீ. பரப்புக்கான உதவியைப் பெற முடியும்.
  3. பறவைத் தடுப்பு வலை அமைக்க ச.மீ.க்கு ரூ.17.50 வழங்கப்படும். இதில், ஒரு பயனாளி அதிகளவாக 5,000 ச.மீ. பரப்புக்கான உதவியைப் பெற முடியும்.
  4. பிளாஸ்டிக் நிலப் போர்வை அமைக்க எக்டருக்கு ரூ.16,000 வழங்கப்படும். இதில், ஒரு பயனாளி 2 எக்டருக்கான உதவியைப் பெற முடியும்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மைக்கு 30% மானியம்
  1. நுண்ணூட்ட உரம் வாங்க எக்டருக்கு ரூ.500 வழங்கப்படும்.
தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த 40% மானியம்
  1. தேனீக்களுடன் தேனிப் பெட்டி வாங்க ரூ.1,600 வழங்கப்படும்.
  2. தேன் பிழிந்தெடுக்கும் கருவி வாங்க ரூ.8,000 வழங்கப்படும்.
இயந்திரமயமாக்கல் 25-40% மானியம் 
  1. டிராக்டர்-20 PTO HP வரை வாங்க ரூ.75,000 வழங்கப்படும்.
  2. பவர் டில்லர்-8 BHPக்கு மேல் வாங்க ரூ.60,000 வழங்கப்படும்.
  3. பவர் டில்லர்-8 BHPக்கு கீழ் வாங்க ரூ.40,000 வழங்கப்படும்.
  4. டிராக்டரில் இணைக்கப்பட்ட தெளிப்பான் வாங்க ரூ.8,000 வழங்கப்படும்.
  5. விசைத் தெளிப்பான்(12-16 லிட்டர்) வாங்க ரூ.3,000 வழங்கப்படும்.
  6. கைத் தெளிப்பான் வாங்க ரூ.500 வழங்கப்படும்.
  7. விசைத் தெளிப்பான்(8-12 லிட்டர்) வாங்க ரூ.2,500 வழங்கப்படும்.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கு 35-50% மானியம்
  1. சிப்பம் கட்டும் அறை 9×6 மீட்டரில் அமைக்க ரூ.2 இலட்சம் வழங்கப்படும்.
  2. முன் குளிர்விப்பு அலகு (6 மெ. டன்) அமைக்க ரூ.8.75 இலட்சம் வழங்கப்படும்.
  3. வெங்காயச் சேமிப்புக் கூடம் (25 மெ.டன்) அமைக்க ரூ.87,500 வழங்கப்படும்.
  4. ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை 9×18 மீட்டரில் அமைக்க ரூ.17.50 இலட்சம் வழங்கப்படும்.
  5. குளிர்பதனச் சேமிப்புக் கிடங்கு (வகை-ஒன்று)அமைக்க ரூ.2,800/மெ.டன் வீதம் வழங்கப்படும்.
  6. குளிர்பதனச் சேமிப்புக் கிடங்கு (வகை-இரண்டு) அமைக்க ரூ.3,500/மெ.டன் வீதம் வழங்கப்படும்.
  7. ஒருங்கிணைந்த குளிர்த் தொடர் சங்கிலி அமைப்புக்கு ரூ.2.10 கோடி வழங்கப்படும்.
  8. பழுக்க வைக்கப்படும் அறை அமைக்க ரூ.35,000/மெ.டன் வீதம் வழங்கப்படும்.
  9. குளிரூட்டப்பட்ட வாகனம் வாங்க ரூ.9.10 இலட்சம் வழங்கப்படும்.
சந்தை உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த 35% மானியம்
  1. சில்லறை விற்பனை மையம் அமைக்க ரூ.5.25 இலட்சம் வழங்கப்படும்.
  2. நகரும் விற்பனை வண்டி வாங்க ரூ.15,000 வழங்கப்படும்.
பண்ணைக் குறைகளை நிவர்த்தி செய்ய 50% மானியம் 
  1. ஒரு விவசாயிக்கு ரூ.2,000 வரை வழங்கப்படும்.

3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
தோட்டக்கலைப் பயிர்களுக்குப் புத்துயிர் ஊட்டுதல் 
  1. பழ வகைத் தோட்டங்களுக்கு, எக்டருக்கு ரூ.30,000 வழங்கப்படும்.
  2. காய்கறித் தோட்டங்கள் அமைக்க எக்டருக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
வெங்காய அபிவிருத்தித் திட்டம்
  1. வெங்காய சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.2,000 வழங்கப்படும்.
  2. வெங்காயச் சேமிப்புக் கிடங்கு அமைக்க ரூ.3,500/மெ.டன் வீதம் வழங்கப்படும்.
சூழல் அடிப்படையிலான பூச்சி மேலாண்மைத் திட்டம்
  1. வெளிச்சப் பொறிகள் அமைக்க எக்டருக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
  2. இனக்கவர்ச்சிப் பொறிகள், மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகள் வாங்க எக்டருக்கு ரூ.1,200 வழங்கப்படும்.
இதர உதவிகள்
  1. வாழைத்தார் உறை வாங்க எக்டருக்கு ரூ.12,500 வழங்கப்படும்.
  2. அறுவடைக்கான அலுமினிய ஏணி வாங்க ஒரு பயனாளிக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
  3. பத்து பிளாஸ்டிக் கூடைகள் வாங்க ரூ.3,750 வழங்கப்படும். 
  4. நடவுப் பொருட்கள் வாங்க எக்டருக்கு ரூ.1,250 வழங்கப்படும்.
  5. மூலிகைத் தோட்டத் தளைகள்-2 தளைகள்/குடும்பம்
  6. காய்கறித் தோட்டத்தளைகள்-6 தளைகள்/குடும்பம்
  7. பசுமைக்குடில் அமைக்க ச.மீ.க்கு ரூ.467.50 வழங்கப்படும். அதிகளவாக 4,000 ச.மீ. வரை அமைக்கலாம்.
  8. நிழல்வலைக் குடில் அமைக்க ச.மீ.க்கு ரூ.355 வழங்கப்படும். அதிகளவாக 4,000 ச.மீ. வரை அமைக்கலாம்.

4. மானாவாரிப் பகுதி மேம்பாடு (RAD)
மண்புழு உரம் உற்பத்தி
  1. நிரந்தர மண்புழு உர உற்பத்திக் கூடம் அமைக்க ரூ.50,000 வழங்கப்படும்.
  2. மண்புழுப் படுக்கை அமைக்க ரூ.8,000 வழங்கப்படும்.
இதர உதவிகள்
  1. தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் அமைக்க எக்டருக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
  2. பசுமைக்குடில் அமைக்க ச.மீ.க்கு ரூ.467.50 வழங்கப்படும். அதிகளவாக 4,000 ச.மீ. வரை அமைக்கலாம்.
  3. அறுவடை பின்செய் சேமிப்புக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டுதல் அலகை அமைக்க ரூ.2 இலட்சம் வழங்கப்படும்.
  4. ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க, குழுவுக்கு ரூ.20,000 வழங்கப்படும்.

5. பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)
  1. தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்
  2. 50 ஏக்கர் கொண்ட இயற்கை வேளாண்மை விவசாயக் குழுக்கள் அமைத்தல்
  3. பங்கேற்பு உத்திரவாதச் சான்றிதழ் மற்றும் தரக்கட்டுப்பாடு
  4. இயற்கை வேளாண்மைக்கான செயல் திட்டம்
  5. ஒருங்கிணைந்த உர மேலாண்மை
  6. வேளாண் கருவிகள் வாடகை மையம்
  7. சிப்பம் கட்டுதல், உற்பத்திப் பொருள்களுக்குப் பெயரிடுதல் மற்றும் வர்த்தகம் செய்தல்

6. ஒருங்கிணைந்த தோட்டக்கலைத் அபிவிருத்தித் திட்டம் (IHDS)
  1. காஞ்சி, கரூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப் படுகிறது.
  2. நடவுச் செடிகள் மற்றும் வீரிய ஒட்டு இரகக் காய்கறி விதைகள் 40% மானியத்தில் வழங்கப்படுகிறது.

7. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்கள்
  1. வாழை
  2. மரவள்ளி
  3. மஞ்சள்
  4. வெங்காயம்
  5. உருளைக் கிழங்கு
  6. மிளகாய்
நிவாரணம் பெறும் நிலைகள்
  1. விதைப்பு, நடவு செய்ய இயலாமை
  2. விதைப்பு செய்து முளைப்புப் பாதித்தல்
  3. இடைப் பருவகால இடர்கள்
  4. அறுவடைக்குப் பின் ஏற்படும் பாதிப்பு
  5. பகுதி சார்ந்த இடர்கள்
  6. மகசூல் இழப்புப் பாதிப்பு

8. தேசிய ஆயுஷ் இயக்கம்-மருத்துவப் பயிர்கள் (NAM-MP)
திட்டம் செயல்பட உள்ள மாவட்டங்கள்
  1. கோயம்புத்தூர்
  2. கடலூர்
  3. திண்டுக்கல்
  4. கன்னியாகுமரி
  5. கரூர்
  6. நாமக்கல்
  7. சேலம்
  8. சிவகங்கை
  9. தஞ்சாவூர்
  10. தேனி
  11. திருப்பூர்
  12. திருச்சி
  13. திருநெல்வேலி
  14. வேலூர்
  15. விழுப்புரம்
மானியம்
  1. கண்வலிக் கிழங்கு சாகுபடிக்கு 50% மானியம். எக்டருக்கு ரூ.1,10,722 வழங்கப்படும்.
  2. செம்மரம் சாகுபடிக்கு 75% மானியம். எக்டருக்கு ரூ.68,245 வழங்கப்படும்.
  3. திப்பிலி சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.30,197 வழங்கப்படும்.

9. தேசிய ஆயுஷ் இயக்கம்-மருத்துவப் பயிர்கள் (NAM-MP)
  1. மணத்தக்காளி சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.12,078 வழங்கப்படும்.
  2. இலவங்கப்பட்டை சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.37,444 வழங்கப்படும்.
  3. வேம்பு சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.18,118 வழங்கப்படும்.
  4. வல்லாரை சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.19,326 வழங்கப்படும்.
  5. சோற்றுக் கற்றாழை சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.20,534 வழங்கப்படும்.
  6. முருங்கை மரம் சாகுபடிக்கு 30% மானியம். எக்டருக்கு ரூ.30,197 வழங்கப்படும்.

-தோட்டக்கலைத் துறை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks