உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உங்கள் வேளாண்மை 9 FarmSSMart

ள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப் பொருட்களுக்குப் பொருந்துமே தவிர, விவசாயத்துக்கு அந்தளவில் இல்லை.

இந்த நிலையை இந்தியாவில் மாற்றியமைக்க உருவானது தான் FarmSSMart என்னும் ஸ்மார்ட்போன் செயலி. இன்றைய காலத்தில், பட்டிதொட்டி வரை, யாவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள வசதிகளை, நன்மை தரக் கூடிய வகையில் அனைவரும் பயன்படுத்திக் கொண்டால் வளர்ச்சி நிச்சயம்.

அந்த அடிப்படையில், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரியும் அனைவரும் தங்களது போன்களில், FarmSSMart என்னும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொண்டால், எளிமையாக தங்களது உற்பத்தியை, நேரடியாகச் சந்தைப்படுத்தி நல்ல இலாபம் ஈட்ட முடியும்.

விவசாயிகள், தங்களது பொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்துவதோடு, செயலி மூலம் சக விவசாயிகளை எளிதில் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான விதைகள், நாற்றுகள், இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த உபகரணங்களை, தங்கள் அருகிலேயே உற்பத்தியாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்குப் பெற்று பயனடையலாம்.

உழுதல், கிணறு தோண்டுதல், நிலத்தடி நீர்மட்டம் அறிதல், நிலத்தைச் செம்மைப்படுத்துதல், நவீன உபகரணங்கள் மூலம் களை எடுத்தல், அறுவடை செய்தல் வரை எந்தவொரு வேலைக்கும் அருகிலேயே உள்ள வாடகைதாரர்களை எளிதில் தொடர்புகொண்டு வரவழைக்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ, குத்தகை அடிப்படையில் பெறவோ விரும்பினால், அதற்கும் FarmSSMart செயலி உதவிக்கரமாக இருக்கிறது. மாடித் தோட்டப் பயனர்களும், தங்களது உற்பத்தியை அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாகச் சந்தைப் படுத்த முடியும்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர், தங்களது கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள், மருத்துவ உதவிகள், ஆலோசனைகளையும் FarmSSMart செயலி வாயிலாகப் பெற முடியும்.

மொத்தத்தில் விவசாயிகளின் நண்பனாக அறிமுகமாகியுள்ள இந்தச் செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று FarmSSMart என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது, https://play.google.com/store/ apps/details?id=com.classibiz.app என்னும் இந்த லிங்கை க்ளிக் செய்தும் தங்களது ஸ்மார்ட் போன்களில் நிறுவிக் கொள்ள முடியும்.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading