My page - topic 1, topic 2, topic 3

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

ன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு நடைபெறும்.

தென்னை இரகங்கள், நடவு, நாற்றங்கால் மேலாண்மை, பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை, வேர் வாடல் மேலாண்மை, இலைக்கருகல் நோய் மேலாண்மை, வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, அறுவடைக்குப் பிறகான மற்றும் மதிப்புக் கூட்டல் உத்திகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கப்படும். தென்னை சார்ந்த விவசாயத் தொழிலுக்கு வெளிப்பாடு வருகை ஏற்பாடு செய்யப்படும். பாடங்கள் தமிழில் கற்றுத் தரப்படும். படிப்பு முடிந்ததும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. படிப்புக் கட்டணம் ரூ.2,560 ஆகும். விண்ணப்பம் மற்றும் படிப்பு சார்ந்த விவரங்களை அறிய, 94430 59228, 82486 99865 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks