My page - topic 1, topic 2, topic 3

தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

ன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்  ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது.

பயிற்சிக் காலம் ஓராண்டு. ஆறு மாதங்கள் வீதம் இரண்டு செமஸ்டர்களாகப் பிரித்துப் பாடங்கள் நடத்தப்படும். பாடநெறிக் கட்டணம் செம்ஸ்டருக்கு 10,000 ரூபாய் வீதம் 20,000 ஆயிரம் ரூபாய். சேர்க்கைக் கட்டணம் 160 ரூபாய். இதில் ஆரம்பக் கட்டணமாக 10,160 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.  

மாதத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேளாண் விஞ்ஞானிகளால் பாடங்கள் நடத்தப்படும்.

இந்தப் பாடத் திட்டத்தில், தென்னை நடவு முறைகள், தென்னை வகைகள், பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர நிர்வாகம், தென்னையைத் தாக்கும் பூச்சிகள், தென்னையைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், தேங்காய் அறுவடை முறைகள், அறுவடைக்குப் பின் மதிப்புக் கூட்டல் ஆகியன குறித்து விரிவாக விளக்கப்படும். கோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்புகள் முழுப் பாடக் காலத்திலும் நடத்தப்படும். தென்னைத் தொழில் துறைக்கு வெளிப்பாடு ஏற்பாடு செய்யப்படும்.

படிப்பு முடிந்ததும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் (TNAU) சான்றிதழ் வழங்கப்படும். பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படும். இந்தப் படிப்பு அறிவியல் அடிப்படையில் தென்னை வளர்ப்பை மேற்கொள்ள உதவும். மேலும் விவரங்களுக்கு: பேராசிரியர் மீனா, பாட மைய ஒருங்கிணைப்பாளர், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார், பொள்ளாச்சி வட்டம், கோவை 642101. செல்பேசி எண்: 98420 67785. மின்னஞ்சல் meepath@gmail.com


ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks