உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளும், தகாத பழக்க வழக்கங்களும், நோயை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் இருந்து விடுபடும் போது, நோயும் விடை பெறும். மாறாக, நோய்க்கான மூலக் காரணத்தை விலக்காமல், நோயைக் குணப்படுத்த மருந்தளிப்பது வன்முறையாகும்.
நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது, நோயுற்றவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பை டாக்டருக்கு மாற்றும் போது சுகாதாரம் கெடுகிறது; பெரிய பெரிய மருத்துவ மனைகளில் இருந்து பிணங்களை எடுத்துச் செல்லும் ஊர்திகளின் எண்ணிக்கை உயர்கிறது.
தூய்மையான நீரும் காற்றும் ஓய்வும் இல்லாததால், மூன்று நாளில் குணமாகும் வயிற்றுப்போக்கு, குழந்தைகளைக் கொன்று விடுகிறது. காரணம், உடலைப் பற்றியும், உணவைப் பற்றியும் சரியான அறிவில்லை.
வயிற்றுப் போக்கின் போது, வேண்டாதது வெளியேறுகிறது; கூடவே அதிகமான நீரும் வெளியேறுவதால் உடல் வற்றிப் போகிறது. அதனால், நீராகக் கழியும் ஒவ்வொரு முறையும், காய்ச்சி வடித்த நீரில், சற்று உப்பும், இரு மடங்கு வெல்லமும் கலந்து கொடுத்தால், குழந்தை பிழைத்துக் கொள்ளும்.
தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து, டாக்டரையும், மாத்திரைகளையும் நம்புவோர், மெல்ல மெல்லச் சாகிறார்கள். இதற்கு மாற்று, கடவுளை நம்புவது. கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வம் நீ என்று உணர்- பாரதி.
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…
சந்தேகமா? கேளுங்கள்!