ஏரி நிறைந்தால் கரை கசியும்!
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்!
ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்!
காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது!
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்!
அகல உழுகிறதை விட ஆழ உழு!
வடக்கே கருத்தால் மழை வரும்!
விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!
உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் அரிவாள் எதற்கு?
மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது!
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்!
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது!
காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்!
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை!
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது!
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
பங்குனி என்று பருப்பதுமில்லை, சித்திரை என்றும் சிறுப்பதுமில்லை!
சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்!
சந்தேகமா? கேளுங்கள்!