பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

பன்றி PIG

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023

ளம் குட்டிகளுக்கு 28 பால் பற்கள், அதாவது, தற்காலிகப் பற்கள் இருக்கும். இவற்றில் 12 முன்னம் பற்களும், 4 கோரைப் பற்களும், 12 முன்தாடைப் பற்களும் அடங்கும்.

பன்றிகளுக்கு ஒன்றரை வயதாகும் போது, நிரந்தரப் பற்கள் அனைத்தும் முளைத்து விடும். அதாவது, பருவமடைந்த பன்றிகளில் 44 நிரந்தரப் பற்கள் இருக்கும். அவை, 12 முன்னம் பற்கள், 4 கோரைப்பற்கள், 16 முன்தாடைப் பற்கள், 12 தாடைப்பற்கள் ஆகும். பெண் பன்றிகளில் இருப்பதை விட ஆண் பன்றிகளில் கோரைப் பற்கள் பெரிதாக இருக்கும்.

அடையாளம் இடுதல்

இனவிருத்திக்காக வளர்க்கப்படும் பன்றிப் பண்ணைகளில் அடையாளம் இடுதல் மிகவும் முக்கிய வேலையாகும். தீவனப் பராமரிப்பு, உற்பத்தி மேலாண்மையைச் சரிவரச் செய்வதற்கும், காப்பீடு செய்வதற்கும் பன்றிகளில் அடையாளம் இடுதல் அவசியமாகும். அடையாளம் இடும் கருவிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பன்றிகளில் அடையாளம் இடுவதற்குப் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவையாவன:

காது தோடுகள்: கறவை மாடுகளின் காதுகளில் தோடுகளை இடுவதைப் போலவே, பன்றிகளுக்கும் தோடுகளை இடலாம். பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தோடுகள் பல நிறங்களில் கிடைக்கும். குறிப்பாக, மஞ்சள் நிறத் தோடுகளில் கறுப்பு நிறத்தில் குறியிட்டு இருப்பது பார்வைக்குப் பளிச்செனத் தெரியும்.

சில பண்ணைகளில் இரு காதுகளில் மாறுபட்ட நிறமுள்ள தோடுகளை அணிவிப்பதும் உண்டு. 20 மி.மீ. நீளம், 13 மி.மீ. அகலமுள்ள தோடுகள் ஐந்து மீட்டர் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். பன்றிகளை மூக்கின் மூலம் கட்டுப்படுத்தி அடையாளம் இடுதல் மிகவும் உகந்த முறையாகும்.

பச்சை குத்துதல்: மனிதர்களுக்குப் பச்சை குத்துவதைப் போலவே, பன்றிகளில், குறிப்பாக, இனவிருத்தி மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளில், குறைந்த செலவில் பச்சை குத்த முடியும். ஒரு மாத வயதுள்ள குட்டிகளில் பச்சை குத்தினால், ஆறு மாத வயதில் தெளிவாகத் தெரியும். பல்வேறு அளவுகளில் உள்ள பச்சை குத்தும் எண்களைக் காதில் இடலாம். கறுப்பு அல்லது பச்சை நிறத்தை இதற்காகப் பயன்படுத்தலாம். கையாலும் கருவி மூலமும் பச்சை குத்தலாம்.

கணினி அடையாளத் தோடுகள்: இப்போது பெரிய பண்ணைகளில், கணினி மூலம் இயக்கும் வகையிலான அடையாளத் தோடுகள் காதில் பொருத்தப்படுகின்றன. சிறிய பாட்டரியுடன் கூடிய இந்தத் தோடுகள் 15-20 கிராம் எடையில் இருக்கும். இவற்றில், பல்வேறு எண்ணிக்கைக் குறியீடு கொண்ட சிப்புகளும் உள்ளன.

இந்தத் தோடுகள் பன்றிகளை அடையாளம் காட்ட உதவுவதுடன், தானியங்கி மூலம் உணவை வழங்கவும், பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளவும் பயன்படுகின்றன. மற்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்ட தோடுகளை விட, இந்தக் குறியீடுகளைக் கொண்ட தோடுகளின் விலை சற்று அதிகமாகும்.


பன்றி Dr Kumaravel

முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading