My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

agri

வ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது.

குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும், பாதாமி என்றும் கூறப்படும் அல்போன்சா மாம்பழம் நல்ல விலைக்குப் போவதால், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் பழப் பண்ணைகள் மூலம் இக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப் படுகின்றன.

இயற்கை வேளாண்மை என்னும் செலவு குறைந்த உத்தி மூலம், நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காது.

உடல் நலம் பேணவும், சந்ததியினருக்குப் புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால், இயற்கை வேளாண்மை எல்லா இடத்துக்கும் எல்லாப் பயிருக்கும் உகந்ததே.

பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல, தரம் மேம்படுவதால் கூடுதல் வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.

இயற்கை வேளாண்மைக்குத் துணையாக, உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தககவ்யா, மண்புழுக் குளியல் நீர், சூடோமோனாஸ், டிரைக்கோ டெர்மா விரிடி,

அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தாள் உரப்பயிர்கள், பயிர்க் கழிவுகள், மிருகக் கழிவுகள், கம்போஸ்ட் வகைகள், பலவிதச் சாம்பல்கள், பலவிதப் புண்ணாக்கு வகைகள் மற்றும் இலைச்சாறுகள் உள்ளன.

இவற்றைத் தவிர, விவசாயிகள் கடைப்பிடிக்க, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை ஆகிய உத்திகள் உள்ளன.

பசுந்தாள் உரப் பயிர்களான, சீமை அகத்தி, சணப்பை, தக்கைப் பூண்டு, பில்லிப்பயறு, கொளுஞ்சி, அவுரி ஆகியவற்றைப் பயிர்ச் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.

பசுந்தழைச் செடிகள், கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு, பூவரசு, புங்கன் தழையையும் பயன்படுத்தலாம்.

தேவையான மண்புழு உரத்தை, ஆடு, மாடு, குதிரை, ஆடுகள் முதலியவற்றின் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.

நிலத்தில் கிடைக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது செலவில்லா உத்தியாகும்.

எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும், எளிய உத்திகளுடன் கூடிய ஊடுபயிர் மற்றும் இணைப் பயிரைத் தேர்வு செய்தால் கூடுதல் வரவு கிடைக்கும். தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி, வாத்து, காடை, வான் கோழிகளை வளர்ப்பதும், பொருளாதார வாய்ப்புள்ள தொழில்களாகும்.

பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்குப் புகையிலைச் சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு, செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல்,

உரிய பருவத்தில் விதைத்தல், பறவை இருக்கையாகப் பழைய பானைகளைப் பயன்படுத்துவது, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலிய பாரம்பரிய பழக்க வழக்கங்கள், விவசாயத்தைச் செழிக்கச் செய்யும். மேலும் விவரம் பெற 98420 07125 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


JD Dr.Elangovan

முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!