My page - topic 1, topic 2, topic 3

அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023

ரு விளைபொருளை விளைபொருளாகவே விற்காமல், அதை உண்ணும் வகையில், பல்வேறு உணவுப் பொருள்களாக மாற்றி விற்கும் போது, அப்பொருளின் தரம் உயர்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். எனவே, அயிலை மீன் மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்புக் குறித்து இங்கே பார்க்கலாம்.

அயிலை மீன் ஊறுகாய்

முதலில் அயிலை மீன்களைச் சுத்தமாகக் கழுவி, அவற்றின் தலை, குடல், செதில், துடுப்பு, செவிள் ஆகியவற்றை நீக்க வேண்டும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். அதில், கொஞ்சம் உப்பையும் மஞ்சள் தூளையும் இட்டு நன்றாகக் கலக்க வேண்டும்.

அடுத்து, ஏற்கெனவே சுத்தம் செய்து வைத்துள்ள அயிலை மீன்களை, துளையுள்ள பாத்திரம் அல்லது கம்பி வலையில் வைத்து, ஒரு நிமிடம் வரை, இந்தக் கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து வெளியே எடுக்க வேண்டும்.

அடுத்து, மீன்களின் வாலில் தொடங்கி, சதையை இரண்டு பாகமாக மெதுவாகப் பிரித்து, நடு முள்ளை நீக்க வேண்டும். அடுத்து, மீன்களின் சதையைக் கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்தி, எண்ணெய்யில் பொரித்து, மசாலாவைச் சேர்த்தால், அயிலை மீன் ஊறுகாய் தயாராகி விடும்.

தேவையான பொருள்கள்: அயிலை மீனின் சதை ஒரு கிலோ, இஞ்சி 200 கிராம், பூண்டு 200 கிராம், பச்சை மிளகாய் 50 கிராம், கறிவேப்பிலை 5 கிராம், கடுகு 25 கிராம், சீரகம் 25 கிராம், வெந்தயம் 5 கிராம், பெருங்காயம் 10 கிராம், மிளகாய்த்தூள் 30 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், கறிமசாலா தூள் 10 கிராம், உப்பு 50 கிராம், வினிகர் 250 மி.லி., எண்ணெய் 400 மி.லி., சிட்ரிக் அமிலம் 10 கிராம், சோடியம் பென்சோயேட் 5 கிராம்.

இவற்றில், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சுத்தம் செய்து, தனித் தனியாக அரைக்க வேண்டும். அடுத்து, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தனித் தனியாக, வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாகப் பொரித்து, பொடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை: அயிலை மீன் சதையைப் பொரிக்கப் பயன்படுத்தி மீந்துள்ள எண்ணெய்யில்,  இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை விழுதை மிதமான வெப்ப நிலையில், பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். அடுத்து, பொடித்து வைத்துள்ள, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தை இதில் சேர்த்து, ஐந்து நிமிடம் நன்றாகக் கிளறி விட வேண்டும்.

அடுத்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கறிமசாலா பொடி, சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். அடுத்து, ஐந்து நிமிடம் கழித்து அடுப்புச் சூட்டைக் குறைத்து வினிகரைச் சேர்க்க வேண்டும்.

அடுத்து, பொரித்து வைத்துள்ள மீன் சதைத் துண்டுகளை இதில் சேர்த்து ஒரு பத்து நிமிடம் வரை நன்றாகக் கிளற வேண்டும். அடுத்து, அடுப்பில் இருந்து இறக்கி, சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்து, ஒருநாள் வரையில் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

சேமித்தல்: பிறகு, அரைமணி நேரம் சுடுநீரில் இட்டு, நன்றாகக் கழுவி வெய்யிலில் காய வைத்துச் சுத்தம் செய்த, 250 கிராம் அளவுள்ள கண்ணாடிப் புட்டிகளில் கழுத்துப் பகுதி வரை நிரப்பி மூடி வைக்க வேண்டும்.

இதை விற்பனை செய்ய நினைத்தால், ஊறுகாய்த் தயாரிப்பில் பயன்படுத்திய பொருள்கள், தயாரித்த நாள், கெடாமல் இருக்கும் காலம், இதிலுள்ள சத்துகள் விவரம் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலைப் புட்டியில் ஒட்டி வைக்க வேண்டும்.

இறால் ஊறுகாய்

புதிதாகப் பிடிக்கப்பட்ட இறால்களைத் தான் ஊறுகாயாகத் தயாரிக்க வேண்டும். முதலில், இறால்களின் ஓடு, குடலை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு 30 கிராம் உப்பு, 20 கிராம் சிட்ரிக் அமிலம் வீதம் கலந்த கலவையில் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து, வெளியே எடுத்து நீரை நன்றாக வடிகட்ட வேண்டும். பிறகு, எண்ணெய்யில் இட்டுப் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

தேவையான பொருள்கள்: அயிலை மீனின் சதை ஒரு கிலோ, இஞ்சி 200 கிராம், பூண்டு 200 கிராம், பச்சை மிளகாய் 50 கிராம், கறிவேப்பிலை 5 கிராம், கடுகு 25 கிராம், சீரகம் 25 கிராம், வெந்தயம் 5 கிராம், பெருங்காயம் 10 கிராம், மிளகாய்த்தூள் 30 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், கறிமசாலா தூள் 10 கிராம், உப்பு 50 கிராம், வினிகர் 250 மி.லி., எண்ணெய் 400 மி.லி., சிட்ரிக் அமிலம் 10 கிராம், சோடியம் பென்சோயேட் 5 கிராம்.

இவற்றில், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சுத்தம் செய்து, தனித் தனியாக அரைக்க வேண்டும். அடுத்து, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தனித் தனியாக, வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாகப் பொரித்து, பொடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை: அயிலை மீன் சதையைப் பொரிக்கப் பயன்படுத்தி மீந்துள்ள எண்ணெய்யில்,  இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை விழுதை மிதமான வெப்ப நிலையில், பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். அடுத்து, பொடித்து வைத்துள்ள, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தை இதில் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாகக் கிளறி விட வேண்டும்.

அடுத்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கறிமசாலா பொடி, சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். அடுத்து, ஐந்து நிமிடம் கழித்து அடுப்புச் சூட்டைக் குறைத்து வினிகரைச் சேர்க்க வேண்டும்.

அடுத்து, பொரித்து வைத்துள்ள மீன் சதைத் துண்டுகளை இதில் சேர்த்து ஒரு பத்து நிமிடம் வரை நன்றாகக் கிளற வேண்டும். அடுத்து, அடுப்பில் இருந்து இறக்கி, சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்து, ஒருநாள் வரையில் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

சேமித்தல்: பிறகு, அரை மணி நேரம் சுடுநீரில் இட்டு, நன்றாகக் கழுவி வெய்யிலில் காய வைத்துச் சுத்தம் செய்த 250 கிராம் அளவுள்ள கண்ணாடிப் புட்டிகளில் கழுத்துப் பகுதி வரை நிரப்பி, அதற்கு மேல், ஒரு செ.மீ. உயரம் எண்ணெய் நிற்கும்படி ஊற்றி மூடி வைக்க வேண்டும்.

இதை விற்பனை செய்ய நினைத்தால், ஊறுகாயைத் தயாரிப்பில் பயன்பட்ட பொருள்கள், தயாரித்த நாள், கெடாமல் இருக்கும் காலம், இதிலுள்ள சத்துகள் விவரம் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலைப் புட்டியில் ஒட்டி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், சிக்கல், நாகப்பட்டினம், தொலைபேசி எண்: 04365 246266 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முனைவர் ஆ.மதிவாணன், யூ.ஹினோ பர்ணான்டோ, முனைவர் அ.கோபால கண்ணன், முனைவர் இரா.ஜெயராமன், முனைவர் சுக.பெலிக்ஸ், வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks