கடற்பாசி என்பது, கடலில் செழித்து வளரும் கடல் தாவரங்கள் மற்றும் பாசி வகைகளைக் குறிக்கும். இந்தக் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் உயிர் இரசாயனங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பல்வேறு உயிரியல் செயல்களால், கடற்பாசி மதிப்புமிகு வளமாகக் கருதப்படுகிறது. பொதுவாகக் கடற்பாசியில், புரதம், சர்க்கரைகள், வைட்டமின்கள், தாதுகள் மற்றும் சுவடுக் கூறுகள் அதிகளவில் உள்ளன.
சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள் என்பவை, கடற்பாசிகளின் கலச்சுவரில் காணப்படும் இயற்கை பல்பகுதியாகும். கடற்பாசியிலிருந்து பெறப்படும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள், உறை மற்றும் உறையில்லா வைரஸ்களுக்கு எதிரான தடுப்புச் செயல்களைக் கொண்டுள்ளன. இவை, வைரஸ் தடுப்பு மருந்துகளின் சாத்தியமான ஆதாரங்களாக மாறியுள்ளன.
இந்தச் சேர்மங்கள், கட்டியெதிர்ப்பு (anti-tumor), வைரஸ் எதிர்ப்பு (anti-virus), உயிர்வளியேற்றத் தடுப்பு (anti-oxidant), நுண்ணுயிர்களைக் கொல்லுதல் (anti-bacterial), உறைவெதிர்ப்பு (anti-coagulant) போன்ற பலவகை மருந்தியல் செயல்களைக் கொண்டுள்ளன.
சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகளில் மிக முக்கியமானவை, சிவப்பு மேக்ரோ ஆல்காவிலிருந்து கிடைக்கும் கராஜீனன், அகர், பச்சை மேக்ரோ ஆல்காவிலிருந்து கிடைக்கும் உல்வன், பழுப்பு மேக்ரோ ஆல்காவிலிருந்து கிடைக்கும் ஃபுயூகாய்டன் மற்றும் லேமினேரியன் ஆகும்.
வைரஸ் எதிர்ப்புச் செயல்கள்
சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள், வைரஸ் எதிர்ப்புத் தன்மைகளைக் கொண்டவை. இவை, பல வகைகளில் செயல்பட்டு, வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கின்றன.
ஓம்புயிரிக் கலத்துக்கும் வைரசுக்குமான இணைப்புத்தடை
வைரஸ்கள் ஓம்புயிரியுடன் அயனித் தொடர்பு மூலம் இணைக்கப் பெறுகின்றன. நேர்மறை மின்னூட்டம் செய்யப்பட்ட வைரஸ்களின் வெளிப்புறக் கிளைக்கோ புரதம், எதிர்மறை மின்னூட்டம் செய்யப்பட்ட ஓம்புயிரிக் கலத்துடன் ஒன்றிக்கும்.
சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள் நேர்மறை மின்னூட்டம் செய்யப்பட்ட கிளைக் கோபுரத்துடன் இணைந்து அவற்றின் மேற்பரப்பில் எதிர்மறை மின்னூட்ட அடர்த்தியை ஏற்படுத்தும். ஓம்புயிரிக் கலன் மேற்பரப்புடன் இணைக்கும் திறனை நேரடியாகக் குறைப்பதன் மூலம், சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள், ஓம்புயிரிக் கலத்துக்குள் வைரஸ் நுழைவதைத் தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.
வைரஸ் ஊடுருவலுக்குத் தடை
வைரஸ், ஓம்புயிரிச் செல்களுடன் உறிஞ்சுதல் மூலம் இணைக்கப்படும். இந்த ஊடுருவல் செயல்பாட்டை நிறுத்த, சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள் வைரஸ் ஏற்பிகளுடன் தொடர்பு கொள்ளும். இந்தத் தொடர்பு வைரஸ் மற்றும் ஓம்பியிரிக் கலன்களுக்கு இடையேயான இணைப்பைத் தடுக்கும். மேலும், அவை முதிர்ந்த வைரஸ்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் பரவலைத் தடுக்கும்.
சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள் மீதிருக்கும் எதிர்மறை மின்னூட்டம், வைரஸ் ஏற்பிகளின் நேர்மறை மின்னூட்டத்துடன் தொடர்பு கொண்டு, அவை மற்ற ஓம்புயிரிக் கலன்களுடன் இணைவதைத் தடுக்கும். இதைப் பல ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உள்ளன.
வைரஸ் உட்புறமயமாதல் மற்றும் உறை நீக்கத்துக்குத் தடை
வைரஸ் ஓம்புயிரிக் கலத்தின் கலமென் சவ்வுடன் இணைக்கப்படுகிறது. பிறகு, ஓம்புயிரிக் கலத்தில் புகுந்து உறை நீக்கம் செய்து முதிர்ந்த விரியன்களை வெளியிடும். சல்பேடட் பாலி சாக்கரைடுகள் வைரஸின் புரதச் சவ்வுடன் தொடர்பு கொண்டு, அவற்றின் உட்புறமயமாதலைத் தடுக்கும். மேலும், சல்பேடட் பாலி சாக்கரைடுகள் வைரஸ் புரத உறையின் அலோஸ்டெரிக் தளத்தில் பிணைக்கப்பட்டு, ஓம்புயிரிக் கலத்துக்குள் வைரஸின் உறை நீக்கத்தைத் தடுக்கும்.
வைரஸின் படியெடுப்பு மற்றும் புரத உற்பத்திச் செயல்முறையைத் தடுத்தல்
வைரஸ், ஓம்புயிரிக் கலத்தில் புகுந்து, உறை நீக்கம் செய்து படியெடுக்கும். ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் போன்ற, படியெடுக்க உதவும் நொதிகளைக் குறுக்கீடு செய்வதன் மூலமும், ஆர்.என்.ஏ.வில் இருந்து புரத உற்பத்தியைத் தடுப்பதன் மூலமும், ஓம்புயிரிக் கலத்தில் நுழைந்த வைரஸின் படியெடுத்தல் செயல்பாட்டை, சில சல்பேடட் பாலி சாக்கரைடுகள் தடுக்கும்.
சல்பேடட் பாலி சாக்கரைடுகள் மற்றும் வைரஸ் தடுப்பில் அவற்றின் பங்கு
சிவப்புக் கடற்பாசி: கராஜீனன்: இது, சிவப்புக் கடற்பாசியில், அயோட்டா, கப்பா, லாம்ப்டா என்னும் மூன்று வகைகளாக உள்ளது. இது, இறால்களின் நோய் எதிர்ப்பை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், வைரஸின் படியெடுப்பைத் தடுக்கிறது.
சிவப்புக் கடற்பாசியில் அதிகமாக இருக்கும் சல்பேடட் கேலக்டன்கள் றுளுளுஏ வைரஸின் ஏP 26 மற்றும் ஏP 28 புரதங்களுடன் இணைந்து, ஓம்புயிரிக் கலத்துடன் வைரஸ் இணைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் றுளுளுஏ பரவலைத் தடுக்கிறது.
பழுப்புக் கடற்பாசி: இதில், 5-20% ஃபுய10காய்டன் உள்ளது. இது, பல இம்யபூனோமோடு லேட்டரி செயல்களைக் கொண்டுள்ளது. ஃபுயபூகஸ் வெஸிகுளோசசில் இருந்து கிடைக்கும் ஃபுயபூகாய்டன் றுளுளுஏ வைரஸ் உண்டாக்கும் நோய்த் தாக்கத்தைத் தடுக்கிறது. மேலும், இது தடுப்பூசி தயாரிப்பில் சிறந்த அட்ஜீவன்ட்டாக உள்ளது. இது, தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் மற்றும் உயிரணுசார் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
ஆல்ஜினேட்: இது, பழுப்பு நிறக் கடற்பாசியின் கலச்சுவர்களில் கரையும் நிலையிலுள்ள அமில பாலிசாக்கரைடு ஆகும். இது, வைரஸ் தடுப்பு மற்றும் இம்யபூனோமோடுலேட்டரி செயல்களைக் கொண்டுள்ளது.
பசிபிக் வெள்ளை இறாலில் ஆல்ஜினேட்டுகள் டோல் போன்ற ஏற்பிகளுடன் இணைந்து நோயெதிர்ப்பு ஏகநிலையைப் பராமரிப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், சர்காஸம் வெட்டலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அல்ஜினிக் அமிலம், பினெயஸ் மோனோடான் போஸ்ட் லார்வாலில் றுளுளுஏ சவாலுக்கு பின் 21 நாட்களில் 79-100% இறப்பைக் குறைத்ததாக அறியப்பட்டுள்ளது.
பச்சைக் கடற்பாசி: உல்வான்: இது, பச்சைக் கடற்பாசியில் 8-29% இருக்கும். இது, உறைவெதிர்ப்பி, நுண்ணுயிர்க்கொல்லி உயிர்வளியேற்றத் தடுப்பி மற்றும் நச்சுயிரி முறியாகவும் செயல்படும். மேலும், இம்யபூனோமோடு லேட்டரி செயல்களைக் கொண்டது. இது, வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.
சல்பேடட் பாலி சாக்கரைடுகள் பல செயல்களைக் கொண்டுள்ள உயர் மதிப்புள்ள உயிர்ப் பொருளாகும். கடற்பாசிகளில் இருந்து கிடைக்கும் சல்பேடட் பாலி சாக்கரைடுகள், பல உயிரியல் சேர்மங்களின் சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன. இவை, டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கு எதிரான தடுப்புச் செயலைக் கொண்டுள்ளன.
இந்த பாலி சாக்கரைடுகளின் ஆன்ட்டி வைரஸ் தன்மைகள், அவற்றின் சல்பேடட் அளவு, மூலக்கூறு எடை, கலவை மற்றும் கட்டமைப்புப் போன்ற காரணிகளைச் சார்ந்தது. பரந்த அளவிலான வைரஸ் எதிர்ப்புத் தன்மைகள், குறைந்த உற்பத்திச் செலவுகள் மற்றும் குறைந்த சைட்டோடாக்ஸிசிட்டி போன்றவை, சல்பேடட் பாலி சாக்கரைடுகளைச் சிறந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தாக ஆக்குகின்றன.
ஜா.பெரோலின் ஜெசினா, மு.பேச்சிமுத்து, ஜெ.ஜாக்குலின் பெரேரா, அபிஷா ஜூலியட் மேரி,
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகை.
சந்தேகமா? கேளுங்கள்!