தமிழக நதிகள், அணைகள், நீர் நிலைகள்!

நதி dam boy

மிழ்நாட்டில் உள்ள நதிகள், அணைகள் மற்றும் நீர் நிலைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

நதிகள்

கடலூர் மாவட்டம்: தென் பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு, ஓங்கூர்.

விழுப்புரம்: கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு.

காஞ்சிபுரம்: அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென் பெண்ணை, பரவனாறு.

திருவள்ளூர்: கூவம், கொஸ்தலை ஆறு, ஆரணியாறு, பாலாறு.

திருவண்ணாமலை: தென் பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு.

கரூர்: அமராவதி, பொன்னை.

திருப்பூர்: நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு.

ஈரோடு: காவிரி, பவானி, உப்பாறு.

நாமக்கல்: காவிரி, உப்பாறு, நொய்யலாறு.

சேலம்: காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு.

தருமபுரி: காவிரி, தொப்பையாறு, தென் பெண்ணை.

கோவை: சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பாம்பாறு, கெளசிகா நதி.

திருச்சி: காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு.

புதுக்கோட்டை: அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டக்கரையாறு.

திண்டுக்கல்: பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகா நதி, நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளை ஆறு, பொன்னையாறு, பாம்பாறு, மஞ்சளாறு.

மதுரை: பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதமல் ஆறு, சுள்ளியாறு, வைரவனாறு, தேனியாறு, வாட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தியாறு, உப்பாறு.

தேனி: வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு.

விருதுநகர்: கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதமல் ஆறு.

இராமநாதபுரம்: குண்டாறு, கிருதமல் ஆறு, வைகை, பாம்பாறு, கோட்டக்கரை ஆறு, உத்திரகோச மங்கை ஆறு.

சிவகங்கை: வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதுமல் ஆறு.

நெல்லை: தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடி ஆறு, அனுமாநதி, கருமேனியாறு, கரமணை ஆறு.

இவற்றைத் தவிர, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா ஆறு, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு. நாகமலை ஆறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு ஆகியன, தாமிரபரணியின் துணை ஆறுகள் ஆகும்.

கன்னியாகுமரி: கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு.

தூத்துக்குடி: ஜம்புநதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, குண்டாறு, கிருதமல் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு.

நாகை: காவிரி, வெண்ணாறு.

திருவாரூர்: காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி.

தஞ்சை: காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், அக்கினி ஆறு.

பெரம்பலூர்: கொள்ளிடம்.

அணைகள்

வராக நதியில் வீடூர் அணை. பெண்ணையாற்றுப் படுகையில், கிருஷ்ணகிரி, சாத்தனூர், தும்பஹள்ளி, பாம்பாறு, வாணியாறு அணை. வெல்லிங்டன்,

வெள்ளாற்றுப் படுகையில், மணிமுக்தா நதி, கோமுகி நதி அணை. தாமிரபரணி ஆற்றுப் படுகையில், மணிமுத்தாறு கடனாநதி, இராமநதி, கறுப்பா நதி, குண்டாறு அணை.

வைகையாற்றுப் படுகையில், வைகை, மஞ்சளாறு, மருதாநதி அணை. கோதையாற்றுப் படுகையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சித்தாறு 1, சித்தாறு 2 அணை.

காவிரிப் படுகையில், மேட்டூர், சின்னாறு, சேகரி குளிஹல்லா, நாகவதி, தொப்பையாறு, பவானி சாகர், குண்டேரி பள்ளம், வறட்டுப் பள்ளம், அமராவதி, பாலாறு, பெருந்தலாறு, வரதமா நதி, உப்பாறு, வட்டமலைக் கரை ஓடை, பரப்பலாறு, பொன்னையாறு, உப்பாறு அணை.

வைப்பாறு படுகையில், பிளவுக்கல், (பெரியாறு நீர்த்தேக்கம்), பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்), வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம், குள்ளூர்ச் சந்தை அணை.

மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைக் கிழக்கே திருப்புதல்: பெரியாற்றுப் படுகையில், பெரியாறு, மேல் நீராறு அணைக்கட்டு, கீழ் நீராறு.

சாலக்குடி நதிப் படுகையில், சோலையாறு, பரம்பிக்குளம், தூனக்கடவு, பெருவாரிப் பள்ளம். பாரதப்புழை நதிப் படுகையில், ஆழியாறு, திருமூர்த்தி ஆறு.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading