புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது.
இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட, மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மை செய்யும் ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் உள்ளன.
மிகவும் அவசியமான இந்தச் சத்துகளை மனித உடலில் உற்பத்தி செய்ய முடியாது என்பதால், மீன் உணவு நமக்கு மிகவும் தேவையாகிறது.
ஒரு மனிதனுக்கு ஒருநாளில் தேவைப்படும் புரதம் என்பது, அவனது உடல் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் ஆகும்.
இதுவே, குழந்தைக்கு 1.5 கிராம், கர்ப்பிணிப் பெண்ணுக்கு 15 கிராம், பாலூட்டும் தாய்க்கு 18 முதல் 25 கிராம் வீதம் தேவைப்படும்.
மீன் உணவு எளிதில் செரிப்பதால், சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாரும் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு மீனைத் தொடர்ந்து கொடுத்து வந்தால், அவர்களின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
நம் உணவில் மீனை அடிக்கடி சேர்க்கும் போது, இதிலுள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் ஆகியன, நம் உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வராமல் காக்கும்.
முனைவர் கி.சிவக்குமார், உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!