My page - topic 1, topic 2, topic 3

தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

தூதுவளையில் மிளகைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால், வறட்டு இருமல் குறையும்.

தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வற்றலாக்கி வதக்கிச் சாப்பிட்டால், கண் குறைகள் நீங்கும்.

தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும். அதனால், தூதுவளைக் கீரையுடன் பருப்பு, நெய் சேர்த்து, 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.

முட்கள் நிறைந்த தூதுவளைத் தண்டு, இலை மற்றும் வேரை நிழலில் 5 நாட்கள் காய வைத்துப் பொடியாக்கி, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குறையும்.

காது மந்தம், நமைச்சல், பெருவயிறு மந்தம், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர்ச் சுரப்பு, பல்லீறுகளில் நீர்ச் சுரப்பு, சூலை ஆகியவற்றுக்கும் தூதுவளைக் கீரை சிறந்தது.

சோற்றுக் கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணமாக்கும் என்பதால், இதற்குக் குமரிக் கற்றாழை என்னும் பெயருமுண்டு.

கற்றாழையின் மேலுள்ள பச்சைத் தோலை நீக்கி விட்டு 7-8 முறை நன்கு கழுவ வேண்டும். பிறகு, ஒரு கிலோ கற்றாழைக்கு ஒரு கிலோ கருப்பட்டி வீதம் தட்டிப் போட்டு, நன்கு கிளற வேண்டும்.

கருப்பட்டித் தூள் கரைந்து பாகு பதத்துக்கு வந்ததும், அதில், தோல் நீக்கிய கால் கிலோ பூண்டைப் போட்டு மீண்டும் கிளற வேண்டும்.

பூண்டு நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தயிர் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்துக்கு வந்ததும் எடுத்து, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதைக் காலை, பகல், இரவு என, உணவுக்குப் பின் ஒரு தேநீர்க் கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால்,

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நீர்க்கட்டி, நீர் எரிச்சல், மாதவிடாய்ச் சிக்கல், மலட்டுத் தன்மை ஆகியன உடனே சரியாகும்.

இதை ஆண்களும் சாப்பிட்டால், சூடு தணிந்து உடல் வலுவாகும்.


மரு.கோ.கலைச்செல்வி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks