ஊடுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
+ நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ நிலக்கடலையில், கம்பை ஊடுபயிராக இட்டால், சுருள்பூச்சி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.
+ துவரை, பாசிப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ பருத்தியில், சூரியகாந்தியை ஊடுபயிராக இட்டால், பச்சைத் தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
+ பருத்தியில், பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு, சோயாவை ஊடுபயிராக இட்டால், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
+ மக்காச்சோளத்தில், ஆமணக்கை ஊடுபயிராக இட்டால், புரொட்டீனியா புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
+ மக்காச்சோளத்தில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், குருத்து ஈ, தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.
+ முட்டைக்கோசில், தக்காளியை ஊடுபயிராக இட்டால், வைரமுதுகு அந்துப்பூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ முட்டைக்கோசில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால் அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.
+ சோளத்தில், அவரையை ஊடுபயிராக இட்டால், சோளத்தண்டுப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ கரும்பில், தக்கைப்பூண்டை ஊடுபயிராக இட்டால், கரும்புத்தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.
+ கத்தரியில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ பாகல் சாகுபடியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
+ வெண்டையில், கொத்தமல்லி மற்றும் சாமந்தியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
+ வெள்ளரியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
+ தட்டைப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், அசுவினி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.
முனைவர் காயத்ரி சுப்பையா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!