My page - topic 1, topic 2, topic 3

மீன்களுக்கு வைட்டமின்களின் அவசியம்!

மீன்களை அழுத்தத்தில் இருந்து குறைக்க உதவுகிறது. மீனுக்கான உணவுகளில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், நீரின் தரம் குறைதல், நீரில் ஆக்ஸிஜன் குறைதல், அம்மோனிய அளவு கூடுதல் ஆகியன நிகழும்.

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

மீன்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில், சத்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சத்துக்குறை உள்ளிட்ட பல காரணிகளால் மீன்கள் நோய்களுக்கு உள்ளாகின்றன.

எனவே, மீன்களில் போதியளவில் சத்துகளைத் தக்க வைத்துப் பாதுகாக்க வேண்டும். சத்துகள் மீன்களின் உடம்பில் குறைந்தால், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இவற்றைக் கருத்தில் கொண்டு மீன்களின் சத்துகளில் வைட்டமின்களின் முக்கியம் குறித்துப் பார்க்கலாம்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள் உடலில் குறைந்தால் உடலியக்கத்தில் சிக்கல் ஏற்படும். பொதுவாக, உணவில் வைட்டமின்கள் குறைவாக இருத்தல், சுற்றுச்சூழல் காரணங்கள், உடலியக்கக் குறைகள் ஆகியவற்றால், வைட்டமின் குறை ஏற்படுகிறது.

இதற்குக் காரணம், வயிற்றில் உணவு நெடுநேரம் இருந்து, எதிர் ஆக்சிஜனேற்றிக் குறைவாக இருக்கும் போது, கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து விடும். வைட்டமின்கள் குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

குறிப்பாக, வளரும் காலங்களில் இது நிகழ்கிறது. மீன்களின் இனப்பெருக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட, பல உடற்சிதை மாற்றங்களில், வைட்டமின்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

இவற்றின் தேவை நீரின் வெப்ப அளவு மாறும் போது மாற்றம் அடைகிறது. ஏனெனில், அதிக வெப்பத்தின் போது, அதிக வைட்டமின்கள் தேவைப்படும். வெப்பம் குறைவான நிலையில், வைட்டமின்கள், அதிகளவில் சேதமடைந்த திசுக்கள் மீண்டும் உருவாக, நோய் வரும் போது அவற்றைத் தடுக்க உதவும்.

நீர்வாழ் விலங்குகளில் வைட்டமின்கள் இரு பிரிவுகளாக உள்ளன. அவை நீரில் கரையும் வைட்டமின்கள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (A1, D3, E) ஆகும்.

நீர்வாழ், நிலவாழ் விலங்குகளின் நோயெதிர்ப்பு அமைப்புச் சீராக இயங்க, வைட்டமின் இ மற்றும் பிற ஆக்சிஜனேற்றிச் சத்துகளான அஸ்கார்பிக் அமிலம், பி கரோட்டின், செலினியம் ஆகியன தேவை.

நீரில் கரையும் வைட்டமின்களை அதிகமாகச் சாப்பிட்டால் அவை அனைத்தும் உடலில் இருந்து வெளியேறி விடும். எனவே, இவை அதிகமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மீனின் உடல் நலத்துக்குத் தேவையான வைட்டமின்கள் சிலவற்றைக் காண்போம்.

வைட்டமின் இ

வைட்டமின் இ, ஒரு கொழுப்பில் கரையும் எதிர் அக்ஸிஜனேற்றி, அதாவது, கொழுப்புகள் அக்சிஜனேற்றம் அடைந்து அழிந்து விடாமல் இது தடுக்கிறது. அண்மையில் நடத்திய ஆய்வில் நோயெதிர்ப்பு சக்தியில் வைட்டமின் இ-யின் பங்கு நிலையற்றது எனத் தெரிய வந்துள்ளது.

ஹார்டி (1990) என்பவர், அட்லான்டிக் சால்மனில் வைட்டமின் இ 2 சதம் உண்பதால், சூப்பர் ஆக்சைடு அயர் உருவாக்கம், லைசோசைம் சுரத்தல், லிப்போகையின் உருவாக்கம் உள்ளிட்ட செயல்களில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்.

வைட்டமின் இ நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதுடன், ஃபர்ன்குலோசிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும், சிறுநீரக நோய்களை வர விடாமல் தடுக்கும்.

வைட்டமின் இ-யின் செயல்களை, செலினியம் அல்லது செயற்கை எதிர் அக்சிஜனேற்றிகள், சல்பர் அமினோ அமிலங்கள், மெத்தியோனின், சிஸ்டீன், அஸ்கார்பிக் அமிலம் ஆகியனவும் செய்கின்றன.

நோயெதிர்ப்பு சக்தி மாறுவதற்கு வைட்டமின் இ-யின் அளவு மாறுவதே காரணம். பெரும்பாலான மீன் உணவுகளில் வைட்டமின் இ ஒரு சதவீதம் (150-400 மி.கி.) இருக்கும். இந்த அளவே நோயெதிர்ப்பு சக்தி சீராக இருப்பதற்கு உகந்தது. உணவுகளில் எதிர் ஆக்சிஜனேற்றிக் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், வைட்டமின் இ-யின் தேவை அதிகரிக்கும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி, கொலாஜன் உருவாக, புண்கள் ஆற, கிட்டோபோய்சிஸ் பல வளர்சிதை மாற்றங்களுக்குத் தேவை. அண்மையில் மீனின் உடலில் நோயெதிர்ப்பில் வைட்டமின் சி-யின் பங்கு குறித்த ஆராய்ச்சி நடந்தது. இதில், வைட்டமின் சி-யை அதிகமாக உண்டால் பாக்டீரியா மற்றும் வைரஸை எதிர்க்கும் சக்தி மீன்களுக்கு மிகுவது தெரிய வந்தது.

இவற்றால் வரும் நோய்கள், கல்லீரல் திசு அழிவு ஹேமரேஜக் சேப்டிசிமியா, ரேயின்போ டிரவுடின், அழிவு இச்சியோப் திரியோசிஸ், அட்லான்டிக் சால்மனில் விப்ரியோசிஸ் மற்றும் ஃபருன்குலோசிஸ், கெளுத்தி மீனில் செப்டிசிமியா ஆகியவற்றில் நோயெதிர்ப்பு செல்கள் உருவாக, பேகோசைட்டோசிஸ்க்கு நோயெதிர்ப்பு உருவாக உதவுகின்றன. ஆனால், இந்நிலை எல்லா மீன்களுக்கும் பொருந்தாது.

வைட்டமின் சி சுற்றுப்புறம் காரணமாக உருவாகும். இது, மீன்களை அழுத்தத்தில் இருந்து குறைக்க உதவுகிறது. மீனுக்கான உணவுகளில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், நீரின் தரம் குறைதல், நீரில் ஆக்ஸிஜன் குறைதல், அம்மோனிய அளவு கூடுதல் ஆகியன நிகழும்.

இந்தச் சமயங்களில் மீனினங்கள் அழுத்தமடையும். மீனின் உணவில் அஸ்கார்பிக் அமிலம் அதிகமாக இருந்தால், தாமிரத்தாலும், நைட்ரேட்டாலும் ஏற்படும் நச்சுத்தன்மை குறையும். வைட்டமின் சி அதிகமாக இருந்தால், ரேயின்போ டிரவுட் மீன்களுக்கு, கரிம குளோரின், பூச்சிக்கொல்லியால் ஏற்படும் விளைவு வராது.

பிற வைட்டமின்கள்

வைட்டமின்கள் ஏ, பி மீன்களின் வளர்ச்சி மாற்றத்துக்கு உதவுகின்றன. வெவ்வேறு வகை வைட்டமின்கள் நொதிகளைத் தூண்டவும், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகின்றன. விலங்குகளில் திசுச்செறிவு குறையும் போது நோயெதிர்ப்பு சக்தி கூடும். ஆனால், இக்கருத்து மீன்கள் விஷயத்தில் பொய்யாகிறது.

சால்மன் மீன்களின் நோயெதிர்ப்பு சக்தி சீராகச் செயல்பட, ஃபோலிக் அமிலம், ரிபோபிளாவின் பைரிடாக்சின், பேன்டோதெனிக் அமிலம், பேன்டோதெனிக் அமிலம் தேவையென என்.ஆர்.சி. (1981) குறிப்பிடுகிறது. பதன நிலைகளால் வைட்டமின் பி குறையும் போது நோயெதிர்ப்பு சக்தி சீராகிறது.

இறுதியாக, மீன்களின் நோயெதிர்ப்பு சக்தியில் இந்த வைட்டமின்களின் பங்கு குறித்து மேலும் ஆராய வேண்டும். இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு, உணவுகளில் போதிய வைட்டமின்கள் உள்ளனவா என்றும், அவை வெவ்வேறு மீன் இனங்களில் எப்படி மாறுகின்றன என்பது பற்றியும், தெரிந்து கொள்ள வேண்டும்.


அ.அனிக்ஸ் விவேக் சந்தியா, கி.லாய்ட் கிறிஸ்பின், க.கருப்புசாமி, மி.வசந்த ராஜன், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், கணபதிபுரம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks