முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம்!

பம்பு செட்டு solar panel

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம்,

நோக்கம்

விவசாயிகளின் இறவைப் பாசனத்துக்கான மின்சாரத் தேவையை உறுதி செய்தல்.

நிதி ஆதாரம்

ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக நிதி 30 சதம், மாநில அரசு நிதி 40 சதம்.

மானியங்களும் சலுகைகளும்

மானியம்: 70 சதம். (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக நிதி 30 சதம், மாநில அரசு நிதி 40 சதம்)

ஆதி திராவிட, பழங்குடியினச் சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.

திட்டப்பகுதி: சென்னை நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள்.

செயல்படுத்தப்படும் பணிகள்: பாசன வசதிக்காக, மின் கட்டமைப்பில் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை, மானியத்தில் விவசாயிகளுக்கு அளித்தல்.

தகுதி: அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள்.

அணுக வேண்டிய அலுவலர்: சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading