பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

பண்ணைக் குட்டை PANNAI KUTTAI

மிழ்நாட்டின் நீர்வளத்தை நவீனப்படுத்தும் வகையில், விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நூறு சதம் மானியம் வழங்குகிறது.

ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிகப் பயிர், பயிர் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்துக்கு உலக வங்கி நிதியுதவி செய்கிறது.

காவிரி டெல்டா உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள்; கீழ் வைகை உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள்; நந்தியாறு- குழையாறு உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட விவசாயிகள்;

சாத்தையாறு, தெற்காறு உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த மதுரை மாவட்ட விவசாயிகள்; கீழ் வெள்ளாறு, கீழ்க்கொள்ளிடம் உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்; நந்தியாறு உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்;

புங்காறு உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த கரூர் மாவட்ட விவசாயிகள்; கீழ்ப்பாலாறு உப வடிநிலப் பகுதியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம், பண்ணைக் குட்டைகளை நூறு சத மானியத்தில் அமைக்கலாம்.

இதற்கான முழு விவரங்களை, அவரவர் பகுதி வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளரை அணுகலாம்.


வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading