My page - topic 1, topic 2, topic 3

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 5!

நீங்கள் கேட்டவை

கேள்வி:

பத்து வெள்ளாடுகளை வளர்க்க எந்த அளவு கொட்டகை அமைக்க வேண்டும்?

– ஆ.செ.ஜெயபிரகாஷ், ஆதனூர்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது.

வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!


கேள்வி:

குதிரைவாலி விதை தேவை. எங்கே கிடைக்கும்?

– இராஜமாணிக்கம், முகையூர், விழுப்புரம் மாவட்டம்.

பதில்:

அய்யா, திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியந்தல் என்னும் ஊரில் சிறுதானிய மகத்துவ மையம் உள்ளது. அங்கே சிறுதானிய விதைகள் அனைத்தும் கிடைக்கும். எனவே, அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம். தொலைபேசி; 04175 298001.


கேள்வி:

எங்கள் பகுதியில் உப்புத் தண்ணீர் தான் உள்ளது. காய்கறிகள் சாகுபடி மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பைப் பற்றிக் கூறுங்கள்.

– பாண்டியன், வரகூர்

பதில்:

அய்யா, உங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களைப் பாருங்கள். மேலும், உங்கள் பகுதியில் என்னென்ன பயிர்கள் விளையும் என்பதை, உங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சாகுபடி செய்யுங்கள்.

செம்மறி ஆடு வளர்ப்பைப் பற்றிய விளக்கம், இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. படியுங்கள்.

செம்மறி ஆடுகளை வளர்ப்பது எப்படி?


கேள்வி:

முந்திரி மரத்தில் காய்கள் நன்கு பிடிக்க என்ன மருந்து அடிக்கலாம்?

– ப.ஆரோக்கியராஜ், அரசகுழி.

பதில்:

அய்யா, முந்திரி மரம் ஒரு பல்லாண்டுப் பயிர். இதற்கு, சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில் கொடுத்தால் தான் மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

இவ்வகையில், ஓராண்டு மரத்துக்கு, 10 கிலோ தொழுவுரம், 150 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.

இரண்டு ஆண்டு மரத்துக்கு, 20 கிலோ தொழுவுரம், 300 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட், 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.

மூன்றாண்டு மரத்துக்கு, 30 கிலோ தொழுவுரம், 450 கிராம் யூரியா, 750 கிராம் சூப்பர் பாஸ்பேட், 300 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.

நான்காண்டு மரத்துக்கு, 40 கிலோ தொழுவுரம், 600 கிராம் யூரியா, 1000 கிராம் சூப்பர் பாஸ்பேட், 400 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.

ஐந்து மற்றும் அதைக் கடந்த மரத்துக்கு, 50 கிலோ தொழுவுரம், 1100 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.

இந்த உரங்களை இரண்டு பாகமாகப் பிரித்து, பருவமழை பெய்யும் போது இட வேண்டும். தழைச்சத்து 1,000 கிராம் இட்டால் அதிக மகசூல் கிடைக்கும். இதை நேரடி இரசாயன உரமாக இடுவதே நல்லது.

தழைச்சத்தை யூரியாவாக, மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் அல்லது ராக்பேஸ்ட்டாக, சாம்பல் சத்தை பொட்டாசாக இட வேண்டும்.

இலைவழித் தெளிப்பாக, நீரில் கரையும் 19: 19: 19 உரத்தை, 0.1 சதம் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும். இதனால், இலைகளும், கிளைகளும் செழிப்பாக வளரும்.

பூக்கும் போது, அதாவது, டிசம்பர் ஜனவரியில், மோனோ அம்மோனியம் பாஸ்பேட்டை 1 சதம் வீதம் எடுத்து, இத்துடன் 0.1 சதம் போரான் நுண்ணுரக் கலவையைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

காய்கள் பிடிக்கும் போது, அதாவது, ஜனவரி பிப்ரவரியில், 3 சத பஞ்சகவ்யா கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளித்தால், காய்ப் பிடிப்பும், மகசூலும் அதிகமாகும்.


கேள்வி:

எனது கன்றுக்குட்டி பிறந்து இரண்டு ஆண்டு ஆகிறது. எந்த அறிகுறியும் இல்லை. கருத்தரிக்கவில்லை. என்ன செய்யலாம்?

– மாரி மகேஷ், காமநாயக்கன்பாளையம்.

பதில்:

அய்யா, உங்களுக்கான பதில் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!


கேள்வி:

காளான் விதை எங்கே கிடைக்கும்?

– தங்கதுரை, வேதாரண்யம்,

பதில்:

அய்யா, இங்கே தரப்பட்டுள்ள முகவரியில் காளான் விதை கிடைக்கும்.

முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர்,

காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,

பயிர் நோயியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூர் – 641 003

தொலைபேசி : 0422 – 6611336, 6611226

நீங்கள் காளான் வளர்ப்பில் ஈடுபடுவதாக இருந்தால், காளான் வளர்ப்பில் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு, சிக்கலில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகுங்கள்.


கேள்வி:

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பு முறையை வரைபடம் மூலமாக விளக்கவும்.

– சா.இராஜமோகன், வெய்யலூர்,கடலூர் மாவட்டம்.

பதில்:

அய்யா, இது, வரைபடம் மூலம் விளக்கும் விசயமல்ல. சரியான பயிற்சி அவசியம். இந்தப் பயிற்சியைப் பெற, விருத்தாச்சலத்தில் உள்ள வேளாண்மை நிலையத்தை அணுகுங்கள். தொலைபேசி எண்: 04143-238353.


கேள்வி:

நான், ஆடு, மாடு, கோழி, இவற்றில் ஏதாவது ஒன்றை வளர்க்க ஆசைப்படுகிறேன். எதை வளர்த்தால் அதிக இலாபம் கிடைக்கும்?

– இரா.சுரேஷ்குமார், அரிவளூர்.

பதில்:

அய்யா, கோழி வளர்க்கலாம். குறைந்த முதலீடு இருந்தால் போதும். நூறு நாட்டுக் கோழிகளை வளர்த்து, தினமும் ஒரு ஐம்பது முட்டைகள் கிடைத்தால், குறைந்தது 500 ரூபாய் சம்பாதிக்கலாம்.

வெள்ளாடுகளை வளர்க்கலாம். ஆனால், தீவன வளர்ப்புக்கு நிலம் வேண்டும். கொஞ்சம் முதலீடு அதிகமாகத் தேவைப்படும்.

மாடு வளர்க்க வேண்டுமானால், முதலீடு இன்னும் அதிகமாகத் தேவைப்படும். தீவன வளர்ப்புக்கு நிலம் இருக்க வேண்டும். எதையும் சரியாகச் செய்தால் நன்றாகவே இருக்கும்.

உங்கள் பொருளாதார நிலையை அறிந்து முடிவு செய்யுங்கள். அதற்கு முன், உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகினால், இந்த மூன்று வளர்ப்பிலும் நீங்கள் பயிற்சி பெற முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அப்புறம் நீங்களே உங்களுக்கு ஏற்றதை முடிவு செய்து விடுவீர்கள். முதலில் பயிற்சிக்கு முயற்சி செய்யுங்கள்.


கேள்வி:

வாழை இலை கருகி வருகிறது. இதற்கு என்ன செய்வது?

– பெ.மகாதேவன், சேலம்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ள கட்டுரைகளில் உள்ளது.

வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!


கேள்வி:

மூன்றறை ஆண்டுகள் ஆன 70 தென்னை மரங்கள் உள்ளன. மரத்தின் ஓலைகளில், கருப்பு வெள்ளை சாம்பல் போன்று படிந்துள்ளது. இதற்கு மருந்து அடிக்கலாமா? இதற்குத் தீர்வு என்ன ?

– இ.இராமஜெயம், உடையனேந்தல்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!


கேள்வி:

விதைப்பந்து உருவாக்கும் முறை, அதைப் பயன்படுத்தும் முறை பற்றிக் கூறுங்கள்.

– லீலாவதி, தருமபுரி.

பதில்:

அம்மா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. படியுங்கள்.

காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?


கேள்வி:

குறைந்த செலவில், நூறு நாட்டுக்கோழி, 20 வெள்ளாடுகளுக்கான கொட்டிலை எப்படி அமைப்பது?

– டி.எம்.மகேந்திரன், முதுகுளத்தூர்.

பதில்:

அய்யா, ஆடு, மாடு, கோழிக் கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அகலம் 25 அடிக்குள் இருப்பது, கொட்டிலுக்குள் நல்ல காற்றோட்ட வசதிக்கு வழி வகுக்கும்.

கோழிக்கு 2 சதுரடி வீதம் கொட்டிலை அமைக்கலாம். பனையோலை அல்லது தென்னங் கீற்றால் குறைந்த செலவில் கொட்டிலை அமைக்கலாம். ஆஸ்பெஸ்டாஸ் தகடு கொண்டும் அமைக்கலாம். கொட்டில் அமைவிடத்தில் மரங்கள் இருந்தால், கொட்டில் குளிர்ச்சியாக இருக்கும். இன்னும் பல விவரங்கள் இங்கே இணைத்துள்ள கட்டுரைகளில் உள்ளன.

வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!


கேள்வி:

எங்களிடம் தென்னை மரங்கள் மற்றும் கழிவுகள் நிறைய உள்ளன. ஆனால். அந்தக் கழிவுகளைத் தூள் செய்வதற்கு இயந்திரம் இல்லை. எங்களுக்கு உதவ முடியுமா?

– ஹரிஹரன், திருவண்ணாமலை.

பதில்:

அய்யா, திருவண்ணாமலையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகிக் கேளுங்கள். கழிவைத் தூளாக்கும் கருவி உங்களுக்கு மானியத்தில் கூடக் கிடைக்கலாம்.


கேள்வி:

எங்கள் 3 ஏக்கர் வயலில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம்.. அதை நல்ல விலையில் விற்பனை செய்யத் தகுந்த அரசு விற்பனைக் கூடம் நாமக்கல் மாவட்டத்தில் எங்கு உள்ளது?

– பொன்னரசன், வேப்பனத்தம் புதூர், நாமக்கல்.

பதில்:

அய்யா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவரம்:

இராசிபுரம்: 27சி, கொன்னேரிபேட்டை, ராசிபுரம்,. தொலைபேசி: 04287 – 222874

நாமக்கல்: சன்ரமனியம்பிள்ளைபேட்டை, நாமக்கல், தொலைபேசி: 04286 – 281434.

சோலக்காடு, கொல்லிமலை, நாமக்கல்.

திருச்செங்கோடு: குமரன் எண்ணெய்ப் பனை, சீத்தாராமபாளையம் அஞ்சல், திருச்செங்கோடு, தொலைபேசி: 04288- 252084

சங்ககிரி: கோலிக்கல்நத்தம் சாலை, சங்ககிரி. தொலைபேசி: 04283- 241030


 

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks