இந்தியக் கால்நடை இனங்கள்!

சாகிவால்

ந்தியாவில் 1652க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குசராத்தி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி என, 22 மொழிகள் மட்டுமே இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவல் மொழிகளாக உள்ளன.

இதைப் போலவே, ஆடு மாடு கோழிகளில் பல்வேறு இனங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில இனங்கள் மட்டுமே வரையறைப் பட்டியலில் வருகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

19 வகைக் கோழிகளும் பிறப்பிடமும்

ஆங்கிலேஸ்வர்: குஜராத்.

அசில், டாங்கி, காளாஸ்தி: ஆந்திரம்.

பஸ்ரா: குஜராத், மராட்டியம்.

சிட்டகாங்: மேகாலயா, திரிபுரா.

டோத்திகிர், மீரி: அசாம்.

கோகஸ்: ஆந்திரம், கர்நாடகம்.

ஹாரிங்கட்டா பிளாக்: மேற்கு வங்கம்.

கடக்நாத்: மத்திய பிரதேசம்.

காஷ்மீர் பேவரோல்லா: ஜம்மு காஷ்மீர்.

நிக்கோபரி: அந்தமான் நிக்கோபர் தீவுகள்.

பஞ்சாப் பிரௌன்: பஞ்சாப், அரியானா.

தெல்லிச்சேரி: கேரளம்.

மேவாரி: இராஜஸ்தான்.

கானுன் நாயேன்: மணிப்பூர்.

ஹன்சிலி: ஒடிசா.

உத்தரா: உத்தரகாண்ட்.

15 வகை எருமைகள்

ஜப்பாராபாடி, மோசனா, சுர்தி, பண்ணி: குஜராத்.

மரத்வாடி, நாக்புரி: மராட்டியம்.

முர்ரா: அரியானா.

நீலிராவி: பஞ்சாப்.

தோடா, பர்கூர்: தமிழ்நாடு.

சிலிகா, கலகண்டி: ஒடிசா.

லுயிட்: அசாம், மணிப்பூர்.

43 வகைப் பசுக்கள்

அமிர்த மஹால், கலிக்கார், கிருஷ்ணாவேலி, மால்நாடு கிட்டா: கர்நாடகம்.

பசாவுர்: பீகார்.

பர்கூர், காங்கேயம், உம்பளாச்சேரி, புலிக்குளம்: தமிழ்நாடு.

டாங்கி, கயாலோ: மராட்டியம், மத்திய பிரதேசம்.

டியோனி, கில்லார்: மராட்டியம், கர்நாடகம்.

கிர்: குஜராத்.

அரியானா, மெவாதி: அரியானா, உ.பி., இராஜஸ்தான்.

காங்கேரேஸ்: குஜராத், இராஜஸ்தான்.

கேன்கத்தா: உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்.

கெரிகரேஹ்: உத்தர பிரதேசம்.

மால்வி, நிமாரி: மத்திய பிரதேசம்.

நாகோரி, ராத்தி, தார்பார்க்கர்: இராஜஸ்தான்.

ஓங்கோல், புங்கனூர்: ஆந்திரம்.

பொன்வார்: உத்தரபிரதேசம்.

சிவப்புக் காந்தாரி: மராட்டியம்.

சிவப்புச் சிந்தி: பாகிஸ்தான்.

சாகிவால்: பஞ்சாப், இராஜஸ்தான்.

சிரி: சிக்கிம், மேற்கு வங்கம்.

வெச்சூர்: கேரளம்.

மோட்டு: ஒடிசா, சத்திஸ்கர், ஆந்திரம்.

குமுசாரி, பிஞ்சஹர்புரி, காரியார்: ஒடிசா.

கோசாலி: சத்திஸ்கர்.

பேலாகி: அரியானா, சத்திஸ்கர்.

கங்காத்திரி: உத்தரபிரதேசம், பீகார்.

பட்ரி: உத்தரகாண்ட்.

லஹிமி: அசாம்.

லடாஹி: ஜம்மு காஷ்மீர்.

கொங்கான் கபிலா: மராட்டியம், கோவா.


கால்நடை JEYAKUMAR

மரு.ம.ஜெயக்குமார், மரு.மு.மலர்மதி, முனைவர் இரா.சரவணன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading