அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்.
நோக்கங்கள்
+ பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்தல்.
+ மண்வளப் பாதுகாப்புப் பணிகள் மூலம், நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.
+ மண்ணரிப்பைக் குறைத்தல் மற்றும் மேல் மண்ணைப் பாதுகாத்தல்.
நிதி ஆதாரம்
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாநில அரசு திட்டம்.
மானியம், சலுகை
மண்வளப் பாதுகாப்புப் பணிகளை, அரசின் 100 சத மானியத்தில் செயல்படுத்துதல்.
திட்டப்பகுதி
தேனி மாவட்டத்தில் வைகை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகிநதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் ஆகிய அணைகளின் தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.
செயல்படுத்தப்படும் பணிகள்
+ கம்பிவலைத் தடுப்பணைகள்.
+ தடுப்பணைகள்.
+ வெள்ளப் பாதுகாப்புச் சுவர்கள்.
+ வண்டல் மண் கண்காணிப்பு நிலையங்கள்.
தகுதி
வைகை, கோமுகிநதி, கெலவரப்பள்ளி, மேட்டூர், சாத்தனூர் ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
அணுக வேண்டிய அலுவலர்
சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.
தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.
சந்தேகமா? கேளுங்கள்!