பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன.

அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக கிடைக்கும். இதற்கு சென்னையைத் தவிர பிற மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!

குறிப்பாக, ஐந்து ஏக்கர் வரை நிலம் கொண்ட சிறு-குறு விவசாயிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும், தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துள்ளவர்கள், அல்லது அமைக்க விரும்பும் விவசாயிகள்தான் பம்பு செட் மானியம் பெறத் தகுதியுடையவர்கள்.

மின்சாரப் பயன்பாட்டை சிக்கனப்படுத்தி, குறைந்த செலவில் தேவையான நீரை இறைத்து, செம்மையான பாசனம் செய்ய விவசாயிகளுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறையால், 4 ஸ்டாருக்குக் குறைவில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை, தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விவசாயிகள் தேர்வு செய்து பம்பு செட்டை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளரை அணுகலாம்.

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய: ps_application


தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!