பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும்.
கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி.
பதில்:
மருந்து தயாரிப்பு முறை!
தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1 கைப்பிடி, உண்ணிச்செடி/அரிசி மலர் ஒரு கைப்பிடி, துளசியிலை 1 கைப்பிடி.
பயன்படுத்தும் முறை: எல்லாப் பொருள்களையும் நன்றாக அரைக்க வேண்டும். பிறகு, இதில் ஒரு லிட்டர் நீரைச் சேர்க்க வேண்டும். அடுத்து, மெல்லிய துணி அல்லது வடிகட்டியால் வடிகட்ட வேண்டும். இதைத் தெளிப்பானில் ஊற்றி, மாட்டின் உடல் முழுவதும் தெளிக்க வேண்டும். மாட்டுக் கொட்டிலில் உள்ள இடுக்குகள், கீறல்கள் மீதும் நன்கு தெளிக்க வேண்டும்.
தெளிப்பதற்குப் பதில் துணியில் நனைத்து மாட்டின் மீது நன்கு தடவி விடலாம். வாரம் ஒருமுறை வீதம், ஒட்டுண்ணிகள் நீங்கும் வரையில் இதைச் செய்து வர வேண்டும். இந்தச் சிகிச்சையை, வெய்யில் நேரத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும்.
பல தானிய விதைப்பைப் பற்றிக் கூறவும்.
கேள்வி: பாலமுருகன், தம்பிக்கோட்டை.
பதில்: பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் நிலைத் தொழில் நுட்பமாகும். இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும். இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த நிலத்தையும் இம்முறையில் வளமாக்க முடியும். இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் மராட்டியத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை அறிஞர் தபோல்கர் என்பவர் ஆவார்.
ஒரு ஏக்கருக்குத் தேவையான பொருள்கள்
தானிய வகைகள்: சோளம் ஒரு கிலோ, கம்பு 250 கிராம், கிலோ, தினை 250 கிராம், சாமை 250 கிராம். எண்ணெய் வித்துகள்: நிலக்கடலைப் பருப்பு 2 கிலோ, எள் 500 கிராம், ஆமணக்கு 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ.
பயறு வகைகள்: உளுந்து ஒரு கிலோ, பாசிப்பயறு ஒரு கிலோ, கொண்டைக் கடலை ஒரு கிலோ, தட்டைப்பயறு ஒரு கிலோ. பசுந்தாள் உர விதைகள்: தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயறு 500 கிராம், கொள்ளு ஒரு கிலோ. நறுமணப் பயிர் விதைகள்: கொத்தமல்லி ஒரு கிலோ, கடுகு 500 கிராம், வெந்தயம் 250 கிராம், சீரகம் 250 கிராம்.
பயன்படுத்தும் முறை
மேலே கூறியுள்ள விதைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, விதைகள் முளைக்கும் ஈரத்தில் நிலத்தை நன்கு உழுது விதைக்க வேண்டும். இந்த விதைகள் முளைத்து வளர்ந்து வரும் சூழலில், 50-60 நாட்களில் மடக்கி உழுதுவிட வேண்டும். இப்படிச் செய்யும் போது, பயிர்கள் மூலம் கிடைக்கும் சத்துகள் சீராக மண்ணுக்குக் கிடைக்கும். இருநூறு நாட்களில் நிலம் வளமாகி விடும்.
பயன்கள்
எளிய முறையில் நிலத்தை வளப்படுத்தலாம். நிலத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மை கூடும். வளர்சிதை மாற்றங்கள் இயற்கையாக நடக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகும்; நிலம் பொலபொலப்பாக மாறும். எனவே, பயிர்கள் நன்கு வேர்விட்டு வளர்ந்து விளைச்சலைப் பெருக்கும். இயற்கை விவசாயத்தில் நிலத்தை வளப்படுத்த உதவும் முக்கியமான நுட்பம் இதுவாகும்.
எனது நிலத்தில் காரத்தன்மை உள்ளது. இதை மாற்ற என்ன வழி?
கேள்வி: ரெங்கதுரை, நன்னிலம் பூங்கா ஊர்.
பதில்: உங்கள் வயல் மண்ணை பரிசோதனை செய்யுங்கள். காரத்தன்மையின் அளவைப் பொறுத்து, அதை எப்படி மாற்றலாம் என்று சொல்வார்கள். மண் பரிசோதனை செய்ய உங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை அணுகுங்கள்.
கோ.5 விதை எங்கே கிடைக்கும்?
கேள்வி: ஆர்.வெங்கடேசன், வீராலூர்.
பதில்: உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று கால்நடை மருத்துவரிடம் கேளுங்கள். சரியான பதில் கிடைக்கும்.
எனக்குச் சாமை கோ.4 விதை வேண்டும்.
கேள்வி: டி.தேவேந்திரன், ஓரியூர்.
பதில்: திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்தை அணுகுங்கள். தொலைபேசி எண்: 04175 – 298001.
நீங்கள் போடுவது எந்த ஊர் சந்தை விலை நிலவரம்?
கேள்வி: வெங்கடேசன், குலசேகரப்பட்டி.
பதில்: காய்கறி விலை-சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம். மலர் விலை-கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தை நிலவரம். பழங்கள் விலை-சென்னை நிலவரம்.
வாதநாராயணன் மரக்கன்று கிடைக்குமா? முடக்கற்றான் செடி வளர்க்க விதை கிடைக்குமா?
கேள்வி: கோமதிதேவி, திருநெல்வேலி.
பதில்:
உங்கள் ஊரிலுள்ள நர்சரிகளில் கேட்டுப் பாருங்கள். உறுதியாகக் கிடைக்கும்.
16 மாத வயதுள்ள நாட்டுக் காளைக் கன்றுக்குத் தடுப்பூசி எதுவும் போட வேண்டுமா?
கேள்வி: சசிக்குமார், மணியகாரன்பட்டி.
பதில்: தொற்று நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க, தடுப்பூசி அவசியம். இதைப் பற்றி அறிய உங்கள் பகுதி கால்நடை மருத்துவ மனையில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுகுங்கள். முழு விவரம் கிடைக்கும்.
தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் விவரம் கூறவும்.
கேள்வி: பிரபின், கன்னியாகுமரி.
படியுங்கள்:
கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?
தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?
கால்நடைகளை வளர்ப்பதற்கான ஆலோசனை வேண்டும்.
கேள்வி: செல்வராஜ், சீலியம்பட்டி.
பதில்: உங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை மருத்துவரை அணுகவும். தக்க ஆலோசனை கிடைக்கும்.
பெருவிடைக் கோழியை வளர்க்கும் முறையைக் கூறவும்.
கேள்வி: அழகர்சாமி, இராஜகிரி.
பதில்: சாதாரணமாக நாட்டுக்கோழியை வளர்ப்பதைப் போல இதையும் வளருங்கள்.
மருந்து எப்படி அடிப்பது?
கேள்வி: மணிகண்டன், யு.அம்பாசமுத்திரம்.
பதில்: எந்தப் பயிருக்கு, எந்தப் பிரச்னைக்கு என்பதைப் பொறுத்தது இது. உங்கள் பகுதி விவசாய அலுவலர்களிடம் இந்த விவரத்தைச் சொல்லிக் கேளுங்கள்.
இயற்கை முறையில் காய் கனிகளைப் பாதுகாக்க, தரையில் அறைகளை எப்படி அமைப்பது?
கேள்வி: அப்துல், தஞ்சாவூர்.
பதில்: தரையில் ஈரமில்லாமல் இருக்க வேண்டும். ஆனால், இயல்பான முறையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல், பழமாக இருந்தால் அழுகத் தொடங்கி விடும். காயாக இருந்தால் வாடிக் காயத் தொடங்கி விடும். இதற்குத் தீர்வு தான் குளிர்ப் பதன வசதி.
பன்றி வளர்ப்புப் பயிற்சி எங்கே கிடைக்கும்?
கேள்வி: ப.சுதாகர், வெள்ளோடு.
பதில்: உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் அல்லது கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும். இதற்கு, உங்கள் பகுதி கால்நடை மருத்துவரை அணுகிக் கேளுங்கள்.
காலாநமக் விதை நெல் வேண்டும் எங்கே கிடைக்கும்?
கேள்வி: அ.ஆரோக்கியராஜ், சங்கராபுரம்.
பதில்: மரபு நெல் இயற்கை வேளாண் பண்ணை, சேலம். தொடர்பு எண்கள்: 94430 98724, 90807 94783. இங்கே கேட்டுப் பாருங்கள். 97900 08071 இந்த எண்ணிலும் கேட்டுப் பாருங்கள்.
சந்தேகமா? கேளுங்கள்!