My page - topic 1, topic 2, topic 3

சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

நாட்டு வைத்தியம் 
1. வாய் நாற்றம்; வயிற்றுப்புண் அகல!

சீரகம் 10 கிராம், சுக்கு 5 கிராம், நெல்லி வற்றல் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்னும் கணக்கில் எடுத்து, இவற்றை ஒன்று சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியிலிருந்து காலை, மாலை இருவேளை அரைத் தேக்கரண்டி வீதம், வாயிலிட்டு மென்று சுவைத்து வெந்நீரைப் பருகி வந்தால், வயிற்றுப் புண்ணும், வாய் நாற்றமும் நீங்கும்.


2. தொழுநோயை அகற்றும் எருக்கு!

எருக்கு இலையை அரைத்துச் சாறெடுத்து அதில் மூன்று துளியுடன் தேனை சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அகலும். இதே மூன்று துளியுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

நான்கைந்து வெள்ளெருக்கம் பூக்களுடன் இஞ்சி, பூண்டைச் சேர்த்து 300 மில்லி நீர் விட்டு 150 மில்லியாக சுண்டக் காய்ச்சி நாளுக்கு மூன்று வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொழுநோயும், வெண்குஷ்டமும் தீரும்.

எருக்கம் வேரைக் கருக்கி விளக்கெண்ணெய்யில் கலந்து தடவினால் வெண்குஷ்டத்தால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.


3. குடல்புண்

மஞ்சளைத் தணலில் இட்டுச் சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். இப்படி எரித்த மஞ்சள் கரிச் சாம்பலைத் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.


4. வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தித் தூளாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.


5. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.


6. மலச் சிக்கல்

செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.


7. சீதபேதி

மலை வாழைப் பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.


8. பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும்.


9. மூச்சுப் பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.


10. சரும நோய்

கமலா ஆரஞ்சுத் தோலை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.


11. தேமல்

வெள்ளைப் பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து மசிய அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தினமும் தேய்த்துக் குளித்து வந்தால், தேமல் குணமாகும்.


12. மூலம்

கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராகச் செய்து சாப்பிட்டு வந்தால், மூலம் குணமாகும்.


13. தீப்புண்

வாழைத் தண்டைச் சுட்டு அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால், தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.


14. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டுச் சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர, மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


15. வறட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.


16. சோர்வு நீங்க

வெறும் வயிற்றில் இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச்சளி அகலும்.


17. சளிக் காய்ச்சல்

புதினாக் கீரையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.


18. இருமல், தொண்டைக் கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.


19. சளி

பூண்டைத் தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.


20. டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சிச் சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.


21. வயிற்றுப் போக்கு

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து வாயில் போட்டுச் சாப்பிடவும். இதுபோல் வெறும் வயிற்றில் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.


22. வாயுக் கோளாறு

மிளகுப் பொடியையும் பெருங்காயப் பொடியையும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்துத் தினமும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.


23. நெஞ்சுச் சளி

தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி, ஆற வைத்து நெஞ்சில் தடவச் சளி குணமாகும்.


24. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகள், சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.


25. தொண்டைக் கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைக் கரகரப்புக் குணமாகும்.


மு.மகேஷ்வரி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks