அத்தியின் ஒட்டுமொத்த நனமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
துவர்ப்புச் சுவையை உடைய அத்திப் பிஞ்சு, பெருங்குடல் மற்றும் ஆசனத் துளையை வலுப்படுத்தும்.
வாயுத் தடங்கல், குருதியுடன் வெளியாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் குருதி மூலத்தைக் குணமாக்கும்.
முற்றிய அத்திக் காயானது, மலத்தை இளக்கி வெளியேற்றும். இடுப்புப் பிடிப்பு, வயிற்றுப் புண், வயிற்று வலியை குணமாக்கும்.
அத்திப் பழத்தில் உள்ள பூச்சிகளை நீக்கிச் சுத்தப்படுத்திச் சாப்பிட்டால், எளிதில் செரித்து, மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால், உடல் திடமாகும். அத்திப் பழத்தை அனைவரும் சாப்பிடலாம்.
மருத்துவ முறையில் அத்தி
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சம அளவில் எடுத்து நொறுக்கி, நீரை ஊற்றிக் காய்ச்சி,
காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால், தீட்டின் போது பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலி என்னும் பெரும்பாடு தணியும்.
அத்திப் பிஞ்சு மற்றும் மாங்கொட்டைப் பருப்பைச் சமமாக எடுத்து, சிறிது நீர்விட்டு விழுதாக அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவில்,
காலை, மதியம், மாலையில், தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால், அனைத்து வகை மலப்போக்கும் நிற்கும்.
அத்திப் பழங்களை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, அவ்வப்போது நீரில் கலந்து குடித்து வந்தால், இரத்த விருத்தி உண்டாகி இரத்த ஓட்டம் சீராகும்.
மலக்கட்டு, நீரிழிவு, நாவறட்சி, உடல் வெப்பம் நீங்கும்.
அத்திப் பாலுடன், வெண்ணெய், சர்க்கரையைக் கலந்து உண்டால், பித்த நோய்கள், சூலை, சிறுநீரில் இரத்தம் காணல், தாதுக்குறை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஆகியன தீரும்.
அத்திமர வேரிலிருந்து இறக்கப்படும் கள்ளுடன், சர்க்கரைப் பேயன் வாழைப் பழத்தைச் சேர்த்து, தினமும் உண்டு வந்தால்,
எலும்பைப் பற்றிய பிணிகள், உட்சூடு, பித்த மயக்கம், நீர் வேட்கை ஆகியன தீரும்.
அத்திப் பழத்துடன் அரைக்கீரை விதைகளைச் சேர்த்து, தினமும் சாப்பிட்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம். இதைக் காய கற்பமென்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
மரு.ப.குமாரசாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர்.
சந்தேகமா? கேளுங்கள்!