பிரேசிலில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில், இந்தியாவைச் சேர்ந்த இந்த நெல்லூர் பசு, 40 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
இந்த மாடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் மற்றும் நெல்லூரைச் சேர்ந்த பாஸ்-இண்டிகஸ் என்னும் இனத்தைச் சார்ந்தது.
வெள்ளை நிறத்தைக் கொண்ட இந்த மாடுகள், அதிகளவு வெப்பத்தை தாங்கக் கூடியவை. அதனால் நோய்கள் எளிதில் தாக்காது; நோயெதிர்ப்பு சக்தியும் இந்த இன மாடுகளுக்கு அதிகம்.
அதனால், 1868 ஆம் ஆண்டிலேயே இந்த இன மாடுகள், பிரேசிலுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு. தற்போது அந்நாட்டில் சுமார் 1.60 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன என்கிறது கணக்கீடு.
இந்த நிலையில்தான் தற்போது படத்தில் கண்ட ஓங்குதாங்கான இந்த பசுமாடு, அந்நாட்டில் நடந்த கால்நடைச் சந்தையில் 40 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
இதன்மூலம், உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன மாடு என்று பெயர் பெற்றிருக்கிறது.