My page - topic 1, topic 2, topic 3

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

எள்

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

ண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கியமானது எள். இதன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பல்வேறு உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், சித்திரைப் பட்டத்தில் பயிரிட ஏற்ற எள் இரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வி.ஆர்.ஐ.1 எள் இரகம்

இதன் வயது 85-90 நாட்கள். தை, மாசி மற்றும் சித்திரைப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். பச்சைப்பூ (phyllody) மற்றும் வேரழுகல் நோயை, மிதமாகத் தாங்கி வளரும். விதை பழுப்பு நிறத்தில் இருக்கும்.

எண்ணெய் 50 சதம் கிடைக்கும். எக்டருக்கு 957 கிலோ மகசூல் கிடைக்கும்.

டி.எம்.வி.7 எள் இரகம்

இதன் வயது 85-90 நாட்கள். வேரழுகல் நோயைத் தாங்கி வளரும். மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கு ஏற்ற இரகம். விதை பழுப்பு நிறத்தில் இருக்கும்.

எண்ணெய் 50 சதம் கிடைக்கும். எக்டருக்கு 820 கிலோ மகசூல் கிடைக்கும்.

எஸ்.வி.பி.ஆர்.1 எள் இரகம்

இதன் வயது 75-80 நாட்கள். பச்சைப்பூ (phyllody), இலைகளைப் பிணைக்கும் புழு ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் தன்மையுள்ளது. விதை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

எண்ணெய் 50-54 சதம் கிடைக்கும். எக்டருக்கு 1,115 கிலோ மகசூல் கிடைக்கும்.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!